வெள்ளவத்தையில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு
வெள்ளவத்தை பிரட்ரிக்கா வீதியிலுள்ள கட்டிடத்தில் இருந்து வீழ்ந்து இளைஞர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் நேற்று காலை 8 மாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த நபர் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வெள்ளவத்தை பிரட்ரிக்கா வீதியில் வசிக்கும் 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!