வெள்ளவத்தையில் கிணற்றில் விழுந்து மூதாட்டி பலி..!
வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் அலுவலவத்த பகுதியில் கிணற்றில் விழுந்து பரிதாபகரமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் இடம்பெற்றுள்ளது.
தனது வீட்டிற்கு அருகிலிருந்த கிணற்றில் தவறுதலாக விழுந்ததிலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார் என பொலிசார் தெரிவித்தனர்.
81 வயதான பெண்ணொருவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!