news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வெள்ளவத்தையில் புகையிரதம் மோதி ஒருவர் பலி

15 Aug, 2020
வெள்ளவத்தை பகுதியில் புகையிரத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொக்ஷி பாலத்திற்கு அருகில் இன்று சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வெள்ளவத்தை - காலி வீதி பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!