news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வேட்டைக்குச் சென்றவர் பலி; ஒருவர் கைது!

13 Mar, 2024
துப்பாக்கி வெடிப்புச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (12) மாலை ஓட்டமாவடி - மஜ்மா நகர் பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. நண்பர்கள் இருவர் வேட்டைக்கு சென்ற போது அவர்கள் பயன்படுத்திய வேட்டைத் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஓட்டமாவடி - நாவலடி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இம்தியாஸ் எனும் இளைஞன் பலியாகியுள்ளதுடன், அவருடன் வேட்டைக்குச் சென்ற நபர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!