news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வேன் - பஸ் விபத்தில் ஒருவர் மரணம்; 6 பேர் காயம்

24 Jan, 2023
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புனாணை பிரதான வீதியில் இன்று (24) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிலாபம் பகுதியிலிருந்து காத்தான்குடி நோக்கி சென்ற வேனும் கல்முனையிலிருந்து கதுறுவெல நோக்கி பயணித்த பஸ் வண்டியும் நேருக்கு நேர் மோதியதிலே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் வேன் சாரதி உயிரிழந்துள்ளதுடன், வேனில் பயணித்த ஆறுபேர் காயங்களுக்கு உள்ளாகி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தெரிவித்த வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!