உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
அப்போது அந்த வீடியோ வேண்டுமானால் ஐந்தாயிரம் பணம் தரவேண்டும் என்று கேட்டனர். என் சித்தப்பாவிடம் நடந்த சம்பவம் குறித்து கூறினேன். பணம் கொடுக்க வேண்டாம், இது தொடர்பாக காவல்துறையில் புகார் கொடுக்கலாம் என எனது சித்தி கூறினார்," என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மாணவி, "பிறகு இரண்டு நாட்களாகத் தொடர்ந்து போன் செய்து கொண்டிருந்தனர். அதன்பிறகு என்னை வேலூர் கோட்டைக்கு வருமாறு அழைத்தனர். வர மறுத்தால் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டினர். அதையடுத்து அந்த வீடியோவை என்ன வேண்டுமோ செய்து கொள்ளுங்கள். நான் எங்கும் வரமாட்டேன் என்று கூறிவிட்டேன்.
மறுநாள் மீண்டும் போன் செய்து அருகே உள்ள ஏரிக்கரை மலைக்கு வருமாறு அழைத்தனர். நான் அங்கு அவர்களைச் சந்திக்கச் சென்றபோது, மூன்று பேரில் ஒருவனைப் பிடித்துக்கொண்டேன், பின்னர் உடனிருந்தவர்கள் ஓடிவிட்டனர். அவனிடமிருந்து தொலைப்பேசியை பிடுங்கி, அதிலிருக்கும் எனது வீடியோவை டெலிட் செய்ய முயற்சி செய்தேன்.
அப்போது, அந்த தொலைபேசியில் பல பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து வைத்திருந்தது தெரிந்தது. அனைத்தையும் டெலிட் செய்துவிட்டு, இதுகுறித்து வீட்டிற்கு தெரிவிக்க அங்கிருந்து போன் செய்த நேரத்தில், என்னைத் தலையில் தாக்கிவிட்டு அவன் ஓடிவிட்டான்," என்று கூறிய மாணவி, பிறகே தாம் தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு பேசியபோது, "இந்த சம்பவத்தில் தொடர்புடைய பாலாஜி (வயது 17), கணபதி என்கிற தாமஸ் (வயது 19), ஆகாஷ் (வயது 22) என்ற மூன்று நபர்களை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் இருக்கிறார்," என்று போலீசார் தெரிவித்தனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!