news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வேலை வாய்ப்பு: வடக்கு மாகாண பொதுச்சேவையிலுள்ள பதவியணிகளுக்கு ஆட்சேர்ப்பு

19 Mar, 2026
பதவி வெற்றிடங்கள்: வடக்கு மாகாண பொதுச்சேவையிலுள்ள பதவியணிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைகள் - 2026 வடக்கு மாகாண பொதுச் சேவையின் நன்னடத்தை பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களத்தில் காணப்படும் கீழ்க்குறிப்பிடப்படும் பதவிகளுக்குரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளரினால்விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. (அறிவித்தல் இல.R/2026/09) இப் பதவி வெற்றிடங்கள் திறந்த போட்டிப் பரீட்சை மூலம் நிரப்பப்படும். இதற்கான |விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2026.04.10 ஆகும். 1.மேற்றன் (Matron) ஆண் / பெண் - தரம் III 2. இல்லத்தாய் (House Mother) தரம் III 3. உதவி மேற்றன் (Assistant Matron) ஆண் / பெண் - தரம் III 4. உதவி விடுதிக் காப்பாளர் (Assistant Warden) ஆண் - தரம் III 5. உதவி இல்ல ஆசிரியர் (Assistant House Master) தரம் III 6. உதவி இல்ல ஆசிரியை (Assistant House Mistress) தரம் III 7. தொழிற்பயிற்சிப் போதானாசிரியர் (Vocational Instructor) ) ஆண் / பெண் - தரம் III இதன் பொருட்டான முழுமையான விளம்பர அறிவித்தல்கள் மற்றும் விண்ணப்பங்கள் 6760L160т www.np.gov.lk→ Exam and Recruitment → Advertisement 6760  வடக்கு மாகாண இணையத்தளத்தினூடக பார்வையிட முடியுமென்பதுடன் தகைமையுடையவர்கள், விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டவாறு விண்ணப்பங்களை அனுப்பிவைக்க முடியும் என்பதும் இத்தால் அறியத்தரப்படுகின்றது. 2026.03.19 ஆழ்வாப்பிள்ளை சிறி, செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, வடக்கு மாகாணம்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!