news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வைரலாகும் பிரபல நடிகையின் பள்ளிப்பருவ புகைப்படம்

10 Oct, 2020
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவரின் பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கமலின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டிருக்கிறார். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருக்கும் ஸ்ருதி ஹாசன், தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் படத்தில் நடித்து வருகிறார்.   கொரோனா ஊரடங்கில் உடற்பயிற்சி செய்வது, பாடுவது உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது பள்ளி பருவத்தில் குழந்தையாக இருந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு பழைய நியாபகங்களை நினைவு கூர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!