சட்டத்தின் முன் சரணடையும் அரசியல் அதிகார துஷ்பிரயோகம்;கம்பி எண்ணப்போகும் ராஜபக்ஸ குடும்பத்தினர்
18 Sep, 2026
Russia, China complete first joint submarine patrol mission[/caption]
ரஷ்ய – சீன கூட்டு நீர்மூழ்கி ரோந்து: ஒரு புதிய அத்தியாயம்
ரஷ்ய கடற்படை மற்றும் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவ கடற்படையின்; நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆசிய-பசிபிக் பகுதியில் தங்களது முதல் கூட்டு நீருக்கடியிலான ரோந்துப் பணியை மேற்கொண்டன.
இது ஏற்கனவே கூட்டு கடற்படை ரோந்து மற்றும் கூட்டு குண்டுவீச்சுப் பயிற்சிகளை நடத்தும் மொஸ்கோ மற்றும் பெய்ஜிங் இடையேயான இருதரப்பு இராணுவ நடவடிக்கையின் விரிவாக்கத்தைக் குறிக்கிறது.
இரு நாடுகளும் பாரம்பரியமாகப் பகிர்ந்து கொள்ளும் இராணுவ ஒத்துழைப்பை, கடற்படைக்கு அப்பால், நீருக்கடியில் ரோந்துப் பணிகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளதைக் காட்டுகிறது.
இந்த விஜயமானது 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் சீனாவுக்குச் செல்லும் முதல் விஜயம் ஆகும். இந்த மாநாட்டில் அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் பிற தலைவர்களுடன் இணைந்து விரிவான கொள்கை ரீதியிலான கலந்துரையாடல்களில் ஈடுப்பட்டிருந்தார்.
அமெரிக்காவின் நடவடிக்கையால் ஏற்பட்ட அதிருப்தி, இந்தியா - ரஷ்யா - சீனா உறவுகளை மேலும் வலுப்படுத்த ஒரு புதிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
மறுபுறம் அமெரிக்கா - ரஷ்யா - சீனா இடையிலான போட்டியில் இந்தியா சிக்கிக்கொள்ளாமல், தனது சொந்த தேசிய நலன்களைப் பாதுகாக்க ஒரு நடுநிலையான பாதையை உருவாக்குவது அவசியமாகிறது.
ஜப்பானின் இக்கட்டான நிலை
இந்த புவிசார் அரசியல் சூழலில், ஜப்பான் ஒரு பெரும் சவாலை எதிர்கொள்கிறது. அதன் பாதுகாப்பு அமெரிக்காவைச் சார்ந்துள்ளமையினால், அதன் நம்பகத்தன்மை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
அதே நேரத்தில், பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணியான சீனா, ஒரு ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக மாறியுள்ளது.
எனவே ஜப்பானின் போருக்குப் பிந்தைய வளர்ச்சிக்கு உதவிய அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்குமுறை தற்போது முடிவை நோக்கி செல்லும் போது, அடுத்து வரவிருப்பது என்ன என்பது நிச்சயமற்றதாகியுள்ளது. அந்த யதார்த்தமான உண்மையை ஜப்பானிய தலைவர்கள் உணர்ந்துள்ளனர்.
இத்தாலிய தத்துவஞானி அன்டோனியோ கிராம்சி குறிப்பிட்டது போல, இது ஒரு 'இடைக்காலம்' (Interregnum). பழைய விதிகள் மறைந்துவிட்டன. புதியவை இன்னும் உருவாகவில்லை. டிரம்ப் நிர்வாகத்தின் வரிகள், அரசியல் தலைவர்களின் பகிரங்க கண்டனங்கள் மற்றும் புடினுக்கு அளித்த வரவேற்பு ஆகியவை உலகப் பாதுகாப்பு அமைப்பில் ஆழமான நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளன.
ஆகவே பொருளாதார காரணிகள் சீனாவைக் கட்டுப்படுத்தும் என்றோ, அல்லது அமெரிக்காவின் ஒப்பந்தக் கடமைகள் எப்போதும் நிலைத்திருக்கும் என்றோ ஜப்பானியக் கொள்கை வகுப்பாளர்கள் இனி கருத முடியாது.
இதற்குச் சான்றாக, 2023 ஆம் ஆண்டில் ஃபுக்குஷிமா அணுமின் நிலையத்திலிருந்து நீர் வெளியேற்றம் காரணமாக சீனா, ஜப்பானிய கடல் உணவுகளைத் தடை செய்தபோது, பொருளாதார நிர்ப்பந்தம் ஒரு யதார்த்தமாக மாறியது.
மேலும், அமெரிக்க இராணுவத் தளங்களுக்கான செலவை ஜப்பான் ஏற்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் டிரம்ப் வலியுறுத்துவது, அமெரிக்காவுடனான கூட்டணியின் எதிர்காலம் குறித்த நிச்சயமின்மையை அதிகரிக்கச் செய்கிறது.
மாற்று வழிகளின் தேடலும், ஜப்பானின் எதிர்காலமும்
ஜப்பான் பல மாற்று வழிகளை ஆராய்ந்தாலும், எதுவும் முழுமையான தீர்வல்ல. தென்கிழக்கு ஆசியாவின் 'பாதுகாத்தல்' (Hedging) அமெரிக்காவுடன் பாதுகாப்பு உறவுகளையும், சீனாவுடன் பொருளாதார உறவுகளையும் பேணும் இந்த அணுகுமுறை, ஜப்பானின் அளவு மற்றும் வரலாற்று காரணங்களால் அதற்குப் பொருந்தாது.
ஜப்பான் தனது இராணுவச் செலவுகளை அதிகரித்தால், அதை சீனா 'பாதுகாத்தல்' (Hedging) என்று பார்க்காமல், சீனாவை அடக்கும் ஒரு முயற்சி (containment) என்று கருதும்.
ஹங்கேரியின் 'இணைப்பு' (Connectivity) ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ உத்தரவாதங்கள் ஹங்கேரிக்கு உதவுவது போல, ஜப்பானுக்கு அந்த உத்தரவாதங்கள் இல்லை.
சீன கடற்படை பலமடையும்போது, அமெரிக்காவை பகைத்துக்கொள்வது ஜப்பானுக்கு மிகவும் ஆபத்தானது.
[caption id="attachment_281167" align="alignnone" width="1080"]
Switzerland[/caption]
சுவிட்சர்லாந்தின் 'ஆயுதமேந்திய நடுநிலைமை' (Armed Neutrality). தன்னைச் சுற்றியுள்ள நட்பு நாடுகளால் சூழப்பட்டுள்ள சுவிட்சர்லாந்துக்கு இது பொருந்தும். ஆனால் ஜப்பான், சீனா மற்றும் வட கொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்த அணுகுமுறை சாத்தியமற்றது.
இந்த யதார்த்தங்கள் ஜப்பானின் விருப்பங்களைக் கட்டுப்படுத்துகின்றன. அதன் மக்கள்தொகை சரிவு, புவியியல் பாதிப்பு மற்றும் சீனாவுடனான பொருளாதார சார்ந்திருக்கும் தன்மை ஆகியவை பெரும் சவால்களாகம்.
இருப்பினும், ஜப்பானுக்கு பல பலங்கள் உள்ளன. இது தொடர்ந்து உலகின் முதல் 10 பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும். அதன் தொழில்நுட்ப திறன்கள், ஜனநாயக நம்பகத்தன்மை மற்றும் மென் சக்தி (Soft Power) ஆகியவை முக்கியமானவை.
எனவே, ஜப்பான் ஒரு குறிப்பிட்ட எதிர்காலத்திற்குத் தயாராவதற்குப் பதிலாக, ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்திற்கு தன்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
இது கூட்டாண்மைகளின் தொகுப்பாகும். வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங் இடையே தேர்வு செய்வதை விடுத்து, அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்த முடியும்.
இத்தகைய மூலோபாய நகர்வு அமெரிக்காவின் உதவி குறைந்தால், மாற்று வழிகளை உருவாக்க உதவும். உலகமயமாக்கலின் செயல்திறன் கொள்கைகளுக்குப் பதிலாக, விநியோகச் சங்கிலி பாதுகாப்பு, மூலோபாய இருப்பு மற்றும் முக்கியமான துறைகளில் உள்நாட்டு உற்பத்தித் திறன்களை அதிகரிக்க வேண்டும்.
விதியை வாங்குபவராக (Rule-Taker) இருப்பதை விடுத்து, புதிய உலக ஒழுங்கில் டிஜிட்டல் ஆளுகை மற்றும் உள்கட்டமைப்பு தரநிலைகள் போன்ற துறைகளில் புதிய விதிகளை உருவாக்கும் நாடாக ஜப்பான் செயல்பட வேண்டும்.
ரஷ்யா - சீனா கூட்டு நீர்மூழ்கி ரோந்து, வெறும் ஒரு இராணுவப் பயிற்சி மட்டுமல்ல. இது அமெரிக்காவின் ஆதிக்கத்தை எதிர்க்கும் வகையில், மொஸ்கோவும் பெய்ஜிங்கும் தங்கள் கூட்டணியை வலுப்படுத்துகின்றன என்பதற்கான தெளிவான சமிக்ஞையாகும்.
இந்த நடவடிக்கை, இந்தியாவின் மீது அமெரிக்கா விதித்த வரிகள் மற்றும் ஜப்பானின் பாதுகாப்பு குறித்த நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றுடன் இணைத்து பார்க்கும்போது, உலக அரசியல் அரங்கில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது என்பதை உணர்த்துகிறது.
இந்தக் கூட்டுப் பயிற்சி, அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்குமுறை முடிவுக்கு வரக்கூடும் என்பதற்கான மற்றொரு அறிகுறி. இது,
இந்தியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு, தாங்கள் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணிகள் மீது மட்டும் தங்கியிருக்க முடியாது என்ற பாடத்தை உணர்த்துகிறது.
இந்த இடைக்காலத்தில், ஜப்பானின் எதிர்காலம், அமெரிக்காவின் நம்பகத்தன்மை அல்லது சீனாவின் கருணையின் மீது பந்தயம் கட்டுவதில் இல்லை.
மாறாக, அது தனது சொந்த பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பல கூட்டணிகளை உருவாக்கி, தனது சொந்த மூலோபாயத்தை கவனமாக உருவாக்குவதில்தான் உள்ளது.
இது இந்தியாவின் எதிர்காலத்திற்கும் பொருந்தும். உலக வல்லரசுகளின் போட்டியில் சிக்காமல், தங்கள் நலன்களைப் பாதுகாத்து, புதிய உலக ஒழுங்கை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்க இந்த இரு நாடுகளுக்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன.
(லியோ நிரோஷ தர்ஷன்)
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!