இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு ஷீனா கொலை செய்யப்பட்டார். தனது மூன்றாம் கணவர் பீட்டரின் முதல் தார மகனைக் காதலித்ததால் ஷீனா கவுரவக் கொலை செய்யப் பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கொலை தொடர்பாக இந்திராணி, அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணா மற்றும் கார் டிரைவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முக்கிய சாட்சி...
இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார் ஷீனாவின் சகோதரர் மிக்கயில் போரா. ஷீனாவை இந்திராணி கொலை செய்ததற்காக உண்மைக் காரணம் தனக்கு தெரியும் என தெரிவித்துள்ள மிக்கயில், விரைவில் அதனை ஊடகங்களுக்கு கூறப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
கொலை முயற்சி... இந்நிலையில், ஷீனாவைப் போலவே தன்னையும் இந்திராணி கொல்ல முயற்சித்ததாக பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார் மிக்கயில். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘என்னை கொலை செய்வதற்கு எனது தாய் இந்திராணி 3 முறை முயற்சி செய்தார். புனே மனநல மருத்துவமனையில் 6 மாதம் என்னை அடைத்து வைத்தார்.
போதைக்கு அடிமை...
பின்னர் அங்குள்ள டாக்டர்களின் உதவியுடன் அங்கிருந்து மீண்டு வந்தேன். பின்னர் என்னை போதைக்கு அடிமையாக செய்தார். 2011ல் மறுவாழ்வு மையத்தில் சேர்ந்து சிகிச்சை பெற்று அதிலிருந்தும் மீண்டு வந்தேன்.
விஷ ஊசி போட்டு...
2012 ஏப்ரல் 24ம் தேதி ஷீனா கொலை செய்யப்படுவதற்கு முன் எனக்கு விஷ ஊசி போட்டு கொல்ல முயற்சித்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக நான் தப்பித்தேன்' எனத் தெரிவித்துள்ளார்.
தொடரும் மர்மம்...
அடுத்தடுத்த பல திடுக்கிடும் திருப்பங்கள் இந்த வழக்கில் ஏற்பட்டு வருகிறது. ஆனால், ஷீனா எதற்காக கொல்லப்பட்டார் என்ற உண்மைக் காரணம் மட்டும் இன்னமும் கண்டுபிடிக்கப் படவில்லை. தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!