இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
ஸ்காட்ச் விஸ்கி
இந்தியா மற்றும் பிரிட்டனுக்கு இடையே நீண்ட காலமாக காத்திருப்பில் உள்ள வணிக ஒப்பந்தம் இதனை சரிசெய்யும் என, ஸ்காட்ச் விஸ்கி அசோசியேஷன் நம்புகிறது. இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தாலும் இதுகுறித்து பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.
இந்த ஒப்பந்தம் இறுதியானால், ஸ்காட்ச் விஸ்கியின் விற்பனை அதிகரிக்கும் எனவும் அதன் மீதான வரி குறையும் எனவும் ஸ்காட்ச் விஸ்கி அசோசியேஷன் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த அசோசியேஷன் மேற்கொண்ட ஆய்வின்படி, "அடுத்த ஐந்து ஆண்டுகளில் கூடுதலாக ஒரு பில்லியன் யூரோ வளர்ச்சிக்கு இது வழிவகுக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில், மதிப்பு மற்றும் அளவு இரண்டின் அடிப்படையிலும் பிரான்ஸ் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்தியாவை தவிர்த்து தைவான், சிங்கப்பூர், சீனா ஆகிய நாடுகளிலும் இரண்டு இலக்க வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது என்றும், இது "கொரோனா பெருந்தொற்றிலிருந்து மீண்டு வருவதால் நிகழ்ந்ததாகவும்," அந்த அசோசியேஷன் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் ஸ்காட்ச் விஸ்கி சந்தையில், ஐரோப்பிய ஒன்றியத்தை ஆசிய - பசிபிக் பிராந்தியம் முந்தியுள்ளது.
ஆசிய - பசிபிக் பிராந்தியம் 1.8 பில்லியன் யூரோ அளவுக்கு விஸ்கியை இறக்குமதி செய்துள்ளது. இது உலகளாவிய இறக்குமதியில் 29% ஆக இருந்தது, தற்போது 37% (6.2 பில்லியன் யூரோ) என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.
"2022 ஆம் ஆண்டில், முக்கிய உலகளாவிய சந்தைகளில் வணிகங்களை முழுமையாக மீண்டும் திறந்ததன் மூலம் தொழில்துறை பயனடைந்தது.
இது வணிக மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ஸ்காட்ச் விஸ்கி விற்பனையில் முக்கியமான சாளரத்தைத் திறந்துவிட்டது" என்று அந்த அசோசியேஷனின் தலைமைச் செயல் அலுவலர் மார்க் கென்ட் தெரிவித்தார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!