உலகில் பெரும் பரப்பளவில் கட்டப் பட்ட பிரமாண்ட கோவில்...எங்கே தெரியுமா? -(படங்கள்:வீடியோ இணைப்பு)
06 Sep, 2026
2024 ஆம் ஆண்டில், 1.8 மில்லியனுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஹஜ் யாத்திரையில் பங்கேற்றனர். இது சவூதி அரேபியாவின் பொருளாதார மற்றும் சமூகத் தரவுகளை வழங்கும் "டேட்டா சவூதி" என்ற புள்ளிவிவரத் தளத்தின் தகவல்களின் அடிப்படையில் தெரிவிக்கப்படுகிறது.
ஹஜ்ஜின் போது, ஆண்களும் பெண்களும் ஒரே நேரத்திலும் ஒரே இடத்திலும், பெரும்பாலும் அருகருகே அமர்ந்து ஒரே சடங்குகளைச் செய்கிறார்கள்
பாலினப் பாகுபாடு கிடையாது
பெரும்பாலான மசூதிகளைப் போல, பாலின அடிப்படையில் வேறு வாயில்கள் அல்லது தொழுகை செய்வதற்கு தனித்தனி பகுதிகளைப் பின்பற்றும் மற்ற இஸ்லாமிய சடங்குகளைப் போலல்லாமல், ஹஜ் யாத்திரையின் போது ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் எந்த பாலின பாகுபாடும் கடைபிடிக்கப்படுவது இல்லை.
தனித்துவமான ஆடை அணிவதற்கான வழிமுறைகள்
ஹஜ் யாத்திரை செல்லும் பக்தர்கள் ஆன்மிக சமத்துவத்தையும், பணிவையும் பிரதிபலிக்கும் வகையில் ஆடை அணிவதற்கான வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறார்கள்.
பெண் யாத்ரீகர்கள் ஆண்களைப் போன்ற வெள்ளை ஆடைகளை அணிவதில்லை
ஆண் யாத்ரீகர்கள் 'இஹ்ராம்' எனப்படும் எளிய, வெள்ளை நிற ஆடையை அணிகிறார்கள். சமூக அல்லது பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், அனைவரும் சமம் என்பதை இது குறிக்கிறது.
பெண் யாத்ரீகர்கள் ஆண்கள் அணியும் வெள்ளை துணிகளை அணிவதில்லை.
ஆனால் அவர்கள் தங்களது உடலை முழுவதும் மறைக்கும், தளர்வான ஆடைகளை அணியலாம். அவர்கள் தங்கள் தலையில் முக்காடு போட்டுக் கொள்ள வேண்டும். அவர்களின் முகங்கள் ஹஜ்ஜின் போது மறைக்கப்படாமல் இருக்க வேண்டும்.
மலை ஏறுதல்
ஹஜ்ஜின் மிக முக்கியமான சடங்குகளில் ஒன்று 'தவாஃப்'. இதில் யாத்திரையின் தொடக்கத்திலும் முடிவிலும், பக்தர்கள் காபாவை எதிரெதிர் திசையில் ஏழு முறை வட்டமிடுகிறார்கள். ஆனால், இரண்டு மலைகளுக்கிடையே நடந்து செல்லும் மற்றொரு சடங்கு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஹஜ்ஜின் ஒரு பகுதியாக, மஸ்ஜிதுல் ஹராமின் உள்ளே அமைந்துள்ள சஃபா மற்றும் மர்வா எனும் இரண்டு மலைகளுக்கு இடையில் ஏழு முறை நடந்து செல்வதும் அடங்கும்.
இப்ராஹிம் நபியின் மனைவி ஹஜாரின் போராட்டம் மற்றும் சகிப்புத்தன்மையை நினைவுகூரும் செயலாக இது கருதப்படுகிறது.
அவர் தனது கைக்குழந்தைக்காகத் தண்ணீர் தேடி, இரண்டு மலைகளுக்கு இடையில் ஓடிய நிகழ்வை இது குறிக்கிறது.
யாத்ரீகர்கள் பிரார்த்தனைக்காக அரபாத் மலையின் சமவெளியில் கூடுகிறார்கள்
அராபத் மலையில் நடைபெறும் வழிபாட்டின் உச்சக்கட்டம்
ஹஜ் யாத்திரையின் மையப் புள்ளியாக காபா இருப்பினும், அந்த வழிபாட்டின் உச்சகட்டம் மெக்கா நகரத்துக்கு வெளியே உள்ள பாலைவனப் பகுதியில் அமைந்துள்ள அராஃபத் மலையில் நிகழ்கிறது.
இங்கு, சூரிய உதயத்திலிருந்து அஸ்தமனம் வரை ஒரு நாள் முழுவதும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் ஒன்று கூடி, பிரார்த்தனை செய்து, தியானத்தில் ஈடுபட்டு, குர்ஆன் ஓதி வழிபடுகிறார்கள்.
இஸ்லாமிய நம்பிக்கையின்படி, முஹம்மது நபி தனது கடைசி பிரசங்கத்தை நிகழ்த்திய இடமாக கருதப்படும் இந்த புனித தலம், இஸ்லாத்தில் ஆழமான முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!