news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஹையேஸ் வாகனம் மோதி முதியவர் பலி

04 Jul, 2025
வவுனியா யாழ்வீதியில் வௌ்ளிக்கிழமை (04) இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். குறித்த விபத்து வவுனியா0 யாழ் வீதியில் புதிய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்றது. விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த ஹையேஸ் ரக வாகனம் வவுனியா- யாழ். வீதியில் சென்று கொண்டிருந்த போது வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவருடன் மோதி விபத்திற்குள்ளாகியது. விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். விபத்தில் பலியானவர் யாழ்ப்பாணம் புளியங்கூடலை சேர்ந்த 69 வயதான இ. ஜெகதீஸ்வரன் என்பவராவார். விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!