news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஹோமாகமவில் ஆசிரியை தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

07 Aug, 2024
ஹோமாகம, கொடகம பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியை ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக மீகொடை பொலிஸார் தெரிவித்தனர். 32 வயதுடைய பாடசாலை ஆசிரியை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, உயிரிழந்த ஆசிரியை தனது பிள்ளையைக் கணவருடன் பாடசாலைக்கு அனுப்பி வைத்துவிட்டு பின்னர் வீட்டிற்குள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளார். இதன்போது, ஆசிரியையின் தந்தை தற்செயலாக ஆசிரியையின் வீட்டிற்குச் சென்ற போது ஆசிரியை உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டுள்ளார். இதனையடுத்து, ஆசிரியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!