நாட்டின் பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை
02 Nov, 2026
இதுமட்டுமல்லாது, திருமணத்தில் பங்கேற்ற பல முக்கிய பிரபலங்கள் ஆடம்பர பரிசுகளை வழங்கியுள்ளனர்.
திருமண விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகர் ஷாருக்கான், சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பில் ஃபிரான்ஸில் உள்ள பிளாட்டை பரிசாக வழங்கியுள்ளனர்.
அதேபோல், 16 கோடி ரூபாய் மதிப்பிலான புது வகை ஸ்போர்ட்ஸ் பைக்கை பரிசாக வழங்கியுள்ளார் சல்மான் கான்.
தொடர்ந்து, 20 கோடி ரூபாய் மதிப்பிலான ரோல்ஸ் ராயல்ஸை ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதி பரிசாக வழங்கியுள்ளனர்.
இதேபோல், ரன்பீர் கபூர் - ஆலியா பட் தம்பதியினர் 9 கோடி மதிப்பிலான Mercedes car ஐ பரிசாக வழங்கியுள்ளனர்.
அக்ஷய் குமார் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க பேனாவை வழங்கியுள்ளார். நடிகர் - நடிகைகள்தான் பரிசளித்தார்களா என்றால் இல்லை. உலகப்பணக்காரர்கள் தொடங்கி பேஸ்புக், கூகுள் நிறுவனங்களின் தலைமை நிலைய அதிகாரிகள் வரை முக்கிய பிரபலங்கள் பரிசுகளை வாரி வழங்கியுள்ளனர்.
ஃபேஸ்புக் தலைமை நிலய அதிகாரி மார்க் செக்கர்பர்க் 300 கோடி ரூபாய் மதிப்பிலான ஜெட் விமானத்தை வழங்கியுள்ளார்.
180 கோடியில் தனியார் சொகுசு கப்பலை பில்கேட்ஸும், 100 கோடி ரூபாயில் ஹெலிகாப்டரை சுந்தர் பிச்சையும் பரிசாக வழங்கியுள்ளனர்.
இத்தோடு புகழ்பெற்ற அமெரிக்க மல்யுத்த வீரர் ஜான் சீனா 3 கோடி ரூபாய் மதிப்பிலான Lamborghini காரை பரிசளித்துள்ளார்.
நாம் குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல், திருமண நிகழ்வில் பங்கேற்ற பல விருந்தினர்கள் விலை உயர்ந்த பரிசுகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!