தி ஹண்ட் (The Hunt) தொடர் சொல்வதுபோல ஜெயலலிதாவை கொல்ல சிவராசன் திட்டமிட்டாரா?
24 Aug, 2026
போலி நிறுவனத்தை உருவாக்கி ஏமாற்றினர் ஹெஸ்பொலா ஆயுதக்குழு 10 வருடங்களுக்கு முன்னர் ஒரு போலி நிறுவனத்திடமிருந்து 16,000 வாக்கி-டாக்கிகளை "நல்ல விலையில்" வாங்கியதாகவும் மைக்கேல் கூறினார். "இஸ்ரேலுடன் எந்த தொடர்பும் இல்லை என்று கண்டறிய முடியாத வகையில் வெளிநாட்டு போலி நிறுவனங்களை உருவாக்க எங்களிடம் பல வாய்ப்புகள் இருந்தன. விநியோகச் சங்கிலியை எங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் பல போலி நிறுவனங்களை உருவாக்கினோம்'' என்று அவர் குறிப்பிட்டார். "நாங்கள் ஒரு போலியான உலகத்தை உருவாக்கினோம். அதற்கு கதை எழுதியது, இயக்கியது, தயாரித்தது, நடித்தது என எல்லாம் நாங்கள்தான். உலகமே எங்கள் மேடை'' முன்பு வாக்கி டாக்கிகளை மட்டுமே கொண்டிருந்த ஆப்ரேஷனில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேஜர்களையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டது என்று சிபிஎஸ் செய்திகள் தெரிவித்தது. அந்த சமயம், 'கோல்ட் அப்போலோ' என்ற தாய்வான் நிறுவனத்திடமிருந்து ஹெஸ்பொலா பேஜர்களை வாங்கி வந்ததைக் கண்டறிந்ததாக மொசாட் கூறியது. எனவே கோல்ட் அப்போலோ என்ற பெயரில் மொசாட் ஒரு போலி நிறுவனத்தை நிறுவி, வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்ட பேஜர்களை உருவாக்கியது. இதனை அந்த உண்மையான தாய்வான் நிறுவானத்திற்கே தெரியாமல் செய்தது. இந்த பேஜர்களை பயன்படுத்துபவரை மட்டும் காயப்படுத்தும் அளவுக்கு வெடிமருந்துகளை மொசாட் உள்ளே வைத்ததாக சிபிஎஸ் செய்திகள் தெரிவித்தது.பேஜர் வெடிக்கும் காட்சிகள் சிசிடிவி கேமராக்களிலும் பதிவாகின
"குறைந்தபட்ச சேதம் மட்டுமே ஏற்பட வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக எல்லா செயல்பாடுகளையும் பல முறை சோதனை செய்வதுண்டு", என்று கேப்ரியல் என்று அழைக்கப்படும் மற்றொரு இஸ்ரேலிய ஏஜெண்ட் கூறினார்.
பேஜரில் வரும் செய்திகளை உடனே எடுத்து பார்க்கும் அளவிற்கு மிகவும் அவசரமாக ஒலிக்கும் ஒரு குறிப்பிட்ட ரிங்டோனை மொசாட் தேர்ந்தெடுத்ததாகவும் அவர் கூறினார்.
விளம்பரப் படங்கள் மற்றும் பிரசுரங்களை உருவாக்கி அதனை இணையத்தில் வெளியிட்டு அதன் மூலம் ஹெஸ்பொலா குழுவினரை ஏமாற்றி, மொசாட் இந்த பேஜர்களை வாங்க வைத்ததாக கேப்ரியல் கூறினார்.
"இந்த பேஜர்களை ஹெஸ்பொலா எங்களிடம் இருந்து வாங்கும்போது, இது மொசாட் விற்பனை செய்தது என்று அவர்கள் கொஞ்சம் கூட தெரியவரவில்லை.''
2024- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள், ஹெஸ்பொலா 5,000 பேஜர்களை வாங்கியதாக சிபிஎஸ் நிறுவனம் தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் ஹெஸ்பொலா சந்தேகம் கொள்ளத் தொடங்கியதாக மொசாட் அஞ்சியபோது, இஸ்ரேலின் இந்த தாக்குதல் நடவடிக்கையை தொடுத்தது.
வெடிப்புகளுக்கு பிறகு சிதைந்த ஹெஸ்பொலா
இந்த வெடிப்பு சம்பவத்தினால் லெபனான் முழுவதும் அதிர்ச்சி அலைகள் எழுந்தன. பல்பொருள் அங்காடிகள் உட்பட பேஜர்கள் கொண்டு செல்லப்பட்ட எல்லா இடங்களிலும் இந்த வெடிப்புகள் நிகழ்ந்தன.
இந்த சம்பவத்தில் நடந்த உயிரிழப்புகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. அவர்களில் பலர் கை மற்றும் கால்களை இழந்தனர்.
சில நாட்களுக்குப் பிறகு, ஹெஸ்பொலா இன்னும் இந்த வெடிப்பு தாக்குதலில் இருந்தே மீண்டு வராத நிலையில் இருந்தபோது, இஸ்ரேல் ஹெஸ்பொலா இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை தொடங்கியது. மேலும் இஸ்ரேல் லெபனானில் தரைவழி படையெடுப்பையும் தொடர்ந்தது.
இரு தரப்பினரும் கடந்த நவம்பர் 26-ஆம் தேதி அன்று போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர்.
பேஜர் மற்றும் வாக்கி-டாக்கி தாக்குதல்களை லெபனான் கடுமையாக கண்டித்தது.
மேலும், இஸ்ரேல் லெபனானை "திகைக்க வைத்துள்ளது", என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தலைவர் வோல்கர் துர்க் கூறினார்.
''இந்த தாக்குதல்கள் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தையும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தையும் மீறுவதாக இருக்கின்றன'' என்றும் அவர் கூறினார்.
பிபிசி
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!