news@ilakkiyainfo.com

பிரிவுகள்

10 மாதங்களில் 16 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை

01 Nov, 2024
ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 1,601,949 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, ஒக்டோபர் மாதத்தின் முதல் 27 நாட்களில் மாத்திரம் 117,141 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியா, பிரித்தானியா, ரஷ்யா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.  

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!