10 நாட்களில் ரூ.250 கோடியை கடந்த கருப்பு திரைப்பட வசூல்
நடிகர் Suriya நடித்துள்ள கருப்பு திரைப்படம் உலகளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.
கடந்த 13 ஆண்டுகளாக மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றிக்காக காத்திருந்த சூர்யாவிற்கு, இந்த திரைப்படம் திரை வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த திரைப்படத்தை இயக்குநர் RJ Balaji இயக்கியுள்ளதுடன், Dream Warrior Pictures நிறுவனம் தயாரித்துள்ளது.
மேலும், படத்தில் Trisha Krishnan, Indrans, அனாகா, ஸ்வாசிகா மற்றும் ஷிவதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக சாய் அப்யங்கர் பணியாற்றியுள்ளார்.
வெளியான முதல் நாளிலிருந்தே சிறப்பான வசூலை பெற்றுவரும் கருப்பு திரைப்படம், தற்போது 10 நாட்களில் உலகளவில் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்மூலம், நடிகர் சூர்யாவின் திரை வாழ்க்கையில் முதல் முறையாக ரூ.250 கோடி வசூலை கடந்த திரைப்படம் என்ற சாதனையையும் கருப்பு படைத்துள்ளது.
திரைப்பட ரசிகர்கள் மத்தியில் இந்த வசூல் சாதனை தற்போது அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!