news@ilakkiyainfo.com

பிரிவுகள்

10 வயது சிறுமி கொலை வழக்கில் புதிய திருப்பம் ; தாயின் அதிர்ச்சி குற்றச்சாட்டு

25 May, 2026

தமிழகத்தின் கோவை மாவட்டம் சூளூர் பகுதியில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

காணாமல் போன சிறுமி பின்னர் குளம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், காவல்துறை மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளில், சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த இருவர் இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் தமிழக காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், உயிரிழந்த சிறுமியின் தாய் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகள் வழக்கில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் மகளின் உடலை தன்னிடம் காண்பிக்கவில்லை என்றும், தன்னுடைய அனுமதி இல்லாமல் சிறுமியின் தந்தை உடலை பெற்றுச் சென்று சேலம் மாவட்டத்தில் தகனம் செய்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“நான் செல்வதற்குள் உடலை எரியூட்டி விட்டனர். எங்களுக்கு நீதி வேண்டும்” என அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவமனையில் உடலை பெற்றுக்கொள்வதற்காக தாம் எந்தவித ஆவணங்களிலும் கையெழுத்திடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், சம்பவம் தொடர்பான அனைத்து கோணங்களிலும் காவல்துறையினர் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!