news@ilakkiyainfo.com

பிரிவுகள்

10 வயது மாணவி துஷ்பிரயோகம்: அதிபருக்கு விளக்கமறியலில்

21 Jun, 2026
தனது பாடசாலையில் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் 10 வயதுடைய பாடசாலைச் சிறுமிக்கு பாலியல் துஷ்பிரயோகம் இழைத்த குற்றச்சாட்டில், பாடசாலை அதிபர் ஒருவரை ஜூலை மாதம் 2-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பண்டாரவளை நீதவான் காமுனு சந்திரசேகர (ஜூன் 20) உத்தரவிட்டுள்ளார்.

கொஸ்லந்த, கலிபனாவல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர், இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். அவருக்கு வயது 56 ஆகும்.

குறித்த பாடசாலையில் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்காக, பாடசாலை நேரம் முடிந்த பின்னர் அதிபரால் மேலதிக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்துள்ளன. 

கடந்த 18-ஆம் திகதி வகுப்புக்கு வந்த மாணவர்களுள் இருந்த குறித்த சிறுமியை, வகுப்பறையின் பின் பகுதிக்கு அழைத்துச் சென்று அதிபர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்துச் சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். 

முறைப்பாட்டின் அடிப்படையில் செயற்பட்ட கொஸ்லந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஓ.சி. சுபசிங்க அவர்கள், சந்தேகநபரான அதிபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!