இந்தப் புதிய கடனுதவி அங்கீகரிக்கப்படுமாகவிருந்தால் இவ் வருடம் சீனாவிடமிருந்து இலங்கை பெற்றிருக்கக்கூடிய மொத்த கடன்கள் 100 கோடி டொலர்களுக்கும் அதிகமானமதாகும்.
கொவிட் - 19 கொரோனா வைரஸ் தொற்று நோயின் விளைவான பொருளாதாரத் தாக்கங்களை இலங்கை சமாளிப்பதற்கு உதவியாகக் கடந்த மார்ச்சில் கொழும்புக்கு பெய்ஜிங் 50 கோடி டொலர்கள் அவசர நிதியுதவியை வழங்கியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடுமையாக குவிந்திருக்கும் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான வழிவகைகள் குறித்த இலங்கை ஆராய்ந்து வருகின்ற நேரத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது.
இந்தியாவிடமிருந்து 100 கோடி டொலர்கள் நாணய உடன்படிக்கை , பங்குச் சந்தையில் பெருமளவு முதலீடுகள், சீனாவின் பல கடன்வழங்கும் நிறுவனங்களிடமிருந்து 70 கோடி டொலர்கள் கடனுதவி உட்பட சகலவிதமான தெரிவுகளையம் இலங்கை ஆராய்ந்து வருவதாக பணம் , மூலதனச்சந்தை மற்றும் அரச நிறுவனங்கள் சீர்திருத்தங்கள் இராஜாங்க அமைச்சரான அஜித் நிவாட் கப்ரால் ஊடகங்களுக்கு அண்மையில் தெரிவித்திருந்தார்.
சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் சடலமாக மீட்பு!!
28 Oct, 2026

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!