ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
அல்லு அர்ஜூன், அட்லீPt web
தமிழ்நாட்டில் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள்கூட அதிகபட்சம் 500 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படுகின்றன. இதனால் இயக்குநர்களுக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் கிடைப்பதே அரிது.
மேலும் பெரும்பாலான இளம் இயக்குநர்கள் ஒரு படத்தை உருவாக்க இரண்டு ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்வதால் அதிக சம்பளத்தை எதிர்பார்க்கின்றனர். தெலுங்குத் திரையுலகம் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் வலுவான விநியோகக் கட்டமைப்பைக் கொண்டுள்ளதால், 500 முதல் 750 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யத் துணிகிறது.
எனவே இயக்குநர்களுக்கு 50 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் தர அவர்கள் தயங்குவதில்லை என்று கூறப்படுகிறது.
அல்லு அர்ஜுன், பிரபாஸ் போன்ற தெலுங்கு நடிகர்களுக்கு இருக்கும் 'பான்- இந்தியா' சந்தை மதிப்பும் இயக்குநர்களை அங்கு ஈர்க்கின்றன.
இந்திய மொழி திரைப்படங்களில் இந்திக்குப் பிறகு தெலுங்குப் படங்களுக்கே சர்வதேச சந்தையிலும் வணிக மதிப்பு அதிகம். இதுபோன்ற காரணங்களால் தமிழைவிட தெலுங்கில் இயக்குநர்களுக்கு 30 முதல் 40 விழுக்காடு வரை கூடுதல் ஊதியம் மற்றும் லாபத்தில் பங்கு (Profit Sharing) கிடைப்பதாகக் கூறப்படுகிறது.
ஆக்ஷன் கதைகளை மையமாகக் கொண்டு இயங்கும் இயக்குநர்களுக்கு, தெலுங்கு சினிமாவில் உள்ள 'மாஸ் ஹீரோ' பாணி கதைகளுக்கான களம் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் ஒரு கூடுதல் ஈர்ப்பாக இருக்கலாம்.
மொத்தத்தில் தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர்கள் தெலுங்கு திரையுலகை நோக்கி நகர்வது வெறும் மொழி சார்ந்த நகர்வல்ல. அதிக ஊதியம், மேம்பட்ட படைப்பு சுதந்திரம் மற்றும் உலகளாவிய சந்தையை நோக்கிய ஒரு திட்டமிட்ட தொழில்முறை நகர்வாகவே பார்க்கப்பட வேண்டும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!