உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
கடந்த 100 ஆண்டுகளுக்கு முன், கிராம மக்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தியுள்ளனர். அப்போது, படையல் வைக்கப்பட்ட பொங்கலை நாய் ஒன்று சாப்பிட்டிருக்கிறது.
இதனை அபசகுணமாக மக்கள் கருதவே, பொங்கல் கொண்டாட்டம் அந்த வருடம் கைவிடப்பட்டிருக்கிறது.
அடுத்த வருடம் பொங்கல் வைக்கும்போது ஊரில் இருந்த கால்நடைகள் சில மரணமடைந்ததாக தெரிகிறது.
இதனால் அஞ்சிய கிராம மக்கள், பொங்கல் வைப்பதையே தவிர்த்திருக்கின்றனர். மேலும், இந்த கிராமத்தில் இருந்து திருமணமாகி வெளியூர் செல்லும் பெண்களும் தங்களது வீட்டில் பொங்கல் வைப்பது இல்லை என சொல்கிறார்கள் உள்ளூர் மக்கள்.
இருப்பினும், கிராமத்தில் உள்ள கோவில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சில வருடங்களுக்கு முன்னர் ஊரின் தலைவர் அனைவரும் பொங்கல் வைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொங்கலும் வைத்ததாகவும் அப்போது அவரது வீட்டில் இருந்த மாடு இறந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இருப்பினும், தற்போது நிலைமை மாறியுள்ளதாகவும் ஒருசிலர் பொங்கல் பண்டிகையை கொண்டாடிவருவதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!