பிரா தொங்கும் வேலி; இதை பார்க்கவே குவியும் சுற்றுலாப் பயணிகள்: எங்கே இருக்கிறது தெரியுமா?
21 Nov, 2026
பஷார் அல் ஆசாத்
உயிரிழப்பு: சிரிய போரில் மார்ச் 2011 ஆம் ஆண்டு முதல் மார்ச் 2011 ஆம் ஆண்டு வரை 3,50,209 பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஆனால், இது உண்மையான எண்ணிக்கை இல்லை என்று மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. சிரியாவில் இயங்கும் போர் கண்காணிப்புக் குழு இதுவரை சிரிய போரில் 4,94,438 பேர் பலியாகியிருப்பதாக தெரிவித்துள்ளது.
போரில் ஈடுபட்ட நாடுகள்: சிரிய போரில் அதிபர் பஷார் ஆசாத்துக்கு ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் உதவின.
கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக துருக்கி மற்றும் சில அரபு நாடுகள் இருந்தன. அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் ஆரம்பக்கட்டத்தில் கிளர்ச்சியாளர்களுக்கு உதவின.
11 வருட போர்: 11 வருட போரில் சிரிய மக்கள் எண்ண முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளன. போர் காரணமாக சுமார் 50 லட்சம் மக்கள் வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர்.
6 லட்சம் மக்கள் உள் நாட்டிலேயே அகதிகளாக வேறு இடங்களுக்கு சென்றனர். சுமார் 1 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு உணவு உட்பட மனிதாபிமான உதவிகள் கிடைக்கப்படாமல் போனது. மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் என மனிதாபிமானமற்ற முறையில் குண்டுகள் வீசப்பட்டன.
இட்லிப், அலெப்போ நகரங்கள் போரில் சூறையாடப்பட்டன. நாட்டின் பெரிய நகரங்களை அரசு காட்டுப்பாட்டின் கீழ் இருந்தாலும் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலும் பல நகரங்கள் உள்ளன.
11 ஆண்டுகளாக நடக்கும் சிரிய போர் எப்போது முடிவுக்கு வரும் என்று யாராலும் கணிக்க முடியவில்லை.
ஆனால் அரசியல் ரீதியான பேச்சுவார்த்தை மூலம் சிரிய போரை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
போர் நிறுத்தம் தொடர்பாக ஐ.நா மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தற்போது வரை தோல்வியே அடைந்துள்ளன.
இந்த நிலையில் சிரிய அதிபர் பஷார் பதவி விலகல் ஒன்றையே கிளர்ச்சியாளர்கள் சிரிய போரை முடிவுக்கு கோரிக்கையாக வைக்கின்றனர். கிளர்ச்சியாளர்களின் இந்தக் கோரிக்கையை பஷார் ஏற்கத் தயாராக இல்லை.
சிரிய போரை முடிவுக்கு கொண்டுவர துருக்கி உள்ளிட்ட நாடுகள் எடுத்த முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளன.
இந்த நிலையில்தான் சிரிய உள்நாட்டுப் போர் 12-வது ஆண்டில் நுழைந்திருக்கிறது. அதிகாரத்திற்காக தொடங்கப்பட்ட சிரிய போர் தொடர்கிறது..!
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!