news@ilakkiyainfo.com

பிரிவுகள்

11 நாட்களில் 85 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் பறிமுதல் : 55 கோடி ரூபா சொத்துக்கள் முடக்கம்!

31 Dec, 2023
யுக்திய விசேட நடவடிக்கையின்போது 11 நாட்களில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி சுமார் 85 கோடி ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 55 கோடி ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கப்பட்டதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இன்று (31) தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த காலப்பகுதியில் போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக பொதுமக்கள் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு திணைக்களங்களுக்கு 10,798 தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!