news@ilakkiyainfo.com

பிரிவுகள்

11 லட்சத்து 78 ஆயிரம் பேர் பலி - புரட்டி எடுக்கும் கொரோனா

29 Oct, 2020
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 லட்சத்து 78 ஆயிரத்தை கடந்தது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 78 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 508 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 1,039 பேரும், மெக்சிகோவில் 643 பேரும் கொரோனா தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 4 கோடியே 47 லட்சத்து 39 ஆயிரத்து 916 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 1 கோடியே 8 லட்சத்து 59 ஆயிரத்து 325 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 81 ஆயிரத்து 186 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனாவில் இருந்து 3 கோடியே 25 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 78 ஆயிரத்து 527 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:- அமெரிக்கா - 2,33,122 பிரேசில் - 1,58,468 இந்தியா - 1,20,010 மெக்சிகோ - 89,814 இங்கிலாந்து - 45,675 இத்தாலி - 37,905 பிரான்ஸ் - 35,785 ஸ்பெயின் - 35,466 பெரு - 34,315 ஈரான் - 33,714

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!