news@ilakkiyainfo.com

பிரிவுகள்

டெங்கு காய்ச்சலால் யாழில் 11 வயது பாடசாலை மாணவன் உயிரிழப்பு

22 May, 2022
யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை, பாண்டியன்தாழ்வு பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளான். இதில் பாண்டியன்தாழ்வு பகுதியைச் சேர்ந்த கருணாகரன் ஆரோன் (வயது -11) என்ற யாழ்.சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவனே உயிரிழந்தார். கடந்த 18 ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், 19 ஆம் திகதி வயிற்றோட்டம் மற்றும் வாந்தி ஏற்பட்டு யாழ்.போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . அங்கு குறித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!