news@ilakkiyainfo.com

பிரிவுகள்

11 வயது மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகம் ; பாடசாலை ஆசிரியர் கைது

09 Oct, 2024
11 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்தனர். திஸ்ஸமஹாராம, சேனபுர பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய பாடசாலை ஆசிரியரே கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேக நபரான பாடசாலை ஆசிரியர் கடந்த 2 ஆம் திகதி அன்று பாடசாலை வளாகத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இதன்போது, சந்தேக நபரான பாடசாலை ஆசிரியர் தனது பாடசாலையில் 7 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் 11 வயதுடைய மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இது தொடர்பில் திஸ்ஸமஹாராம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹாராம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!