news@ilakkiyainfo.com

பிரிவுகள்

12 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் ; 64,700 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

05 Apr, 2020

உலகளாவிய ரீதியில் இதுவரை 12 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 64,700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின் படி, கொரோனாவினால் 181 நாடுகளையும், பிராந்தியங்களையும் சேர்ந்த 1,203,099 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதனால் 64,774 உயிரிழப்பு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான 246,893 பேர் குணமடைந்தும் உள்ளனர்.

அதிகளவான கொரோனா தொற்றாளர்களை கொண்ட நாடுகள் :

அமெரிக்கா: 312,146

ஸ்பெய்ன்: 126,168

இத்தாலி: 124,632

ஜேர்மன்: 96,092 பிரான்ஸ்: 90,848 சீனா: 82,574 ஈரான்: 55,743 கொரோனாவால் அதிகளவு உயிரிழப்பு ஏற்பட்ட நாடுகள்: இத்தாலி: 15,362 ஸ்பெய்ன்: 11,947 பிரான்ஸ்: 7,560 பிரிட்டன்: 4,313 ஈரான்: 3,452 சீனா: 3,210 அமெரிக்கா: 2,624 நெதர்லாந்து: 1,651 ஜேர்மன்: 1,444 பெல்ஜியம்: 1,283

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!