ஈரான் காட்டும் சாவு பயம்.. மத்திய கிழக்கை விட்டு அமெரிக்கர்கள் ஓடுவது ஏன்?
24 Oct, 2026
தெற்கு காஸா
மிகுந்த பதற்றத்துடன், அவ்வளவுதான் எங்கள் வாழ்க்கை முடிந்தது என மனதால் எனது அன்புக்குரியவர்களை நினைத்துக்கொண்டிருந்தேன். கதவு உடைக்கப்பட்டது.
உள்ளே வந்த சில ஹமாஸ் குழுவினர், எங்களை நோக்கிச் சரமாரியாகச் சுட்டார்கள். நான் மொத்தம் 12 முறை சுடப்பட்டேன்.
இறந்த சடலங்களுக்கு மத்தியில் நானும் சடலம்போலக் கிடந்தேன். என் இறுதிக்குண்டுக்காக காத்துக்கொண்டிருந்தேன். ஹமாஸ் போராளிகள், நாங்கள் இறந்துவிட்டோமா எனச் சோதித்துவிட்டு, எங்கள் அறையிலிருந்த கோப்புகளைச் சோதனை செய்துவிட்டுப் புறப்பட்டார்கள்.
நான் கொஞ்சம் கொஞ்சமாக இறந்துகொண்டிருந்தேன். சில நிமிடங்களில், என் தோழி சஹா மூச்சுவிடுவதை அறிந்தேன். என்னால், பார்க்க முடிந்தது, கேட்க முடிந்தது அவ்வளவுதான்.
ஆனால், என் தோழி நானும் உயிருடன் இருப்பதை அறிந்து, அவளது சட்டையைக் கழற்றி என் உடலிலிருந்து வெளியேறும் ரத்தத்தை நிறுத்தத் கொடுத்தாள். என் உடலில் எந்த இடங்களிலெல்லாம் காயம் இருக்கிறது என்பதை அறிவதற்குள் நான் இறந்துவிட்டேன் என்றே நினைத்தேன்.
சுமார் நான்கு மணி நேரத்துக்குப் பிறகு மீட்புக்குழு வடிவில் தேவதைகள் வந்தார்கள். அப்போதே அவர்களிடம் என் குடும்பத்தாருக்கு என் நிலையைத் தெரிவிக்கக் கேட்டுக்கொண்டேன்.
இடன் ஆர் சிகிச்சையின் போது
அதன் பிறகு நான் கண் விழித்துப் பார்த்தபோது, மருத்துவமனையில் இருந்தேன். இரண்டு அறுவை சிகிச்சைகள் முடிந்திருக்கின்றன.
மருத்துவமனையில் முதல் 48 மணி நேரம் கடினமானதாக இருந்தது. அடுத்த மூன்று நாள்களுக்கு மருத்துவர்கள் என்னை மயக்கநிலையில் வைத்திருந்தனர்.
என்னுடன் உயிர் பிழைத்த தோழியும் குணமடைந்துவருகிறார். இவ்வளவுக்கு பிறகும் நான் உயிர் பிழைத்திருப்பது அதிசயம்தான். இந்தச் சம்பவம் என் வாழ்வில் திகில் நிறைந்த திரைப்படத்தைப் போன்றது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!