தையிட்டியில் அமைக்கப்பட்டது விகாரை அல்ல, கட்டடம் மட்டுமே - கஜேந்திரகுமார் திட்டவட்டம்
“ஒற்றையாட்சி தத்துவத்தின் கீழ் 13ஆம் திருத்தச் சட்டத்தையும் அதன் கீழான அதிகாரப் பகிர்வையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்கவும் மாட்டாது; அதை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொள்ளவும் மாட்டாது” என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
காங்கிரசைத் தவிர ஏனைய பங்காளிக் கட்சிகள், 1987ஆம் ஆண்டில் தம்மால் அடியோடு நிராகரிக்கப்பட்ட ஒற்றையாட்சிக்குள் இருக்கும் 13ஆம் திருத்தத்தை தீர்வுக்கான அடித்தளமாக ஏற்றுக் கொண்டன என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
“இணைந்த வடகிழக்கு தமிழர் தாயகத்தில் சுயாட்சியை முழுமையாக அனுபவிக்கக் கூடிய ஒரு சமஷ்டி தீர்வை தமிழ் தேசிய கூட்டமைப்பு 2001ஆம் ஆண்டில் கொள்கையாக எடுத்துக் கொண்டிருந்தது. போருக்குப் பின்னர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸை தவிர, ஏனைய மூன்று பங்காளி கட்சிகளும் 13ஆவது திருத்தத்தை, தீர்வுக்குரிய அடித்தளமாக ஏற்க வேண்டும் என்ற கொள்கையை மாற்ற ஆரம்பித்தன. அந்த அடிப்படையில் தான் நாங்கள் வெளியேறினோம்.
பேச்சுவார்த்தைகளில் ஒன்றுபட வேண்டும் என்று பல தடவைகள் கூறிக்கொண்டாலும், தமிழரசு கட்சியும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும் இன்று தேர்தலை மனதில் வைத்து சமஷ்டி என கதைத்துத் திரிகின்றன.தீவுகள் ஆராயுங்கள்
இன்று சுமந்திரன் ஒற்றையாட்சி அரசியலமைப்பை தூக்கிப் பிடித்துக் கொண்டு திரிகின்றார். அதேபோல், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, கிட்டத்தட்ட 40 வருடங்களாக எதையுமே செய்ய முடியாத 13ஆவது திருத்தத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டு திரிகின்றார்கள்.
ஒற்றையாட்சிக்குள் இருக்கும் எதுவுமே சரி வரப்போவதில்லை. இதுவே, எமது தெளிவான நிலைப்பாடு. ஒற்றுமை என்ற பூச்சாண்டியை காட்டி வாக்குகளைப் பெற்றுக் கொண்ட பின், மக்களை ஏமாற்றுவதற்கு நாங்கள் தயாரில்லை” என்று வாரமஞ்சரியிடம் அவர் தெரிவித்தார்.
அவர் தமிழ் அரசியல் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்தபோது, தமிழ்க் கட்சிகள் தமிழ் தேசிய வாதத்தை கரைத்து வருவதாகவும், தம்மை மக்கள் நிராகரிக்கத் தொடங்கியதுமே தற்போது நடிக்கத் தொடங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டதோடு, 22 பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள், 16 ஆகி, பின் 8ஆக மாறிய பின்னர் தான் மக்கள் மத்தியில் நிற்க முடியாத நிலையில் நடிக்கின்றார்கள் போலத் தெரிகிறது என்று கஜேந்திரகுமார் மேலும் குறிப்பிட்டார்.
தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதியை சந்திக்க சென்றபோது தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், 6 கட்சிகள் இணைந்து ஜனாதிபதியை சந்தித்த போதும் தமக்கு அழைப்பில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். அவருடனான உரையாடல் தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பாக திரும்பியது.

“இவ்விடயத்தில் அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.
நாங்கள் இனவாதிகள், பௌத்தத்துக்கு எதிரானவர்கள் என்றால், நாகவிகாரையை எப்போதோ மூடச் சொல்லியிருப்போமே!
அதேவேளை, நாவற்குழி விகாரையும் சட்டவிரோதமானது. பௌத்தம் வடகிழக்கில் இருக்க கூடாது என்றால், நாங்கள் அந்த விதத்தில் செயற்பட்டிருப்போம். நாங்கள் செயற்படுவது, தமிழ் மக்களுக்கு அநீதி நடக்கும் இடத்திலும் மதம் என்ற பெயரில் பௌத்தத்தை காட்டி, தமிழ் மக்களுக்கு அநீதி நடக்கும் இடத்திலும் தான். தையிட்டியை எதிர்ப்பதற்கு அது ஒரு தனியார் காணியில் எந்தவொரு காரணமும் இன்றி, எந்த நியாயமும் இல்லாமல், காணிகளை பறித்து அங்கே சட்டவிரோதமாக விகாரை கட்டப்பட்டுள்ளது என்பதுதான் காரணம்.
ஏனெனில் தையிட்டி விகாரைக்குரிய காணி வேறு இடத்தில் உள்ளது. அது போதாது என்றதற்காக, தனியாருடைய காணிகளை பறிக்கலாமா? அந்த காணிக்குள் 36 வருடங்களாக மக்களால் போக முடியவில்லை.
போர் முடிந்த பிறகு, தமது வாழ்க்கையைத் தொடங்க வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில், சட்டவிரோதமாக அவர்களின் காணிகளைப் பறித்தது தான் தவறு. ஏனெனில், தையிட்டியில், தொல்பொருள் சம்பந்தப்பட்ட எந்தத் தடயங்களும் இல்லை. அதை ஆய்வு செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு இடமே இல்லை. அங்கு ஒரு விகாரை இருந்ததற்கான, தென்மேற்காக எந்த அடையாளமும் இல்லை. அதை தெல்லிப்பழை பிரதேச செயலாளர் அறிக்கை ஊடாக சொல்லியிருக்கின்றார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!