news@ilakkiyainfo.com

பிரிவுகள்

14 வயதான பாடசாலை மாணவி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் : இளைஞர் கைது!

19 Dec, 2023
14 வயதான பாடசாலை மாணவியை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கடத்திச் சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் இளைஞர் ஒருவர் நவகத்தகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 18 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் தலுவெல வஹ்ரக பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவராவார். நவகத்தேகம - வெலேவெவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் ஆனமடுவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!