news@ilakkiyainfo.com

பிரிவுகள்

14 வயது மாணவியைக் கடத்திய 17 வயது இளைஞர் கைது

18 Jun, 2026


14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரைத் தற்காலிகமாகத் தம்முடன் அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், 17 வயதுடைய கடை ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நமுனுகுல பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மாணவி நமுனுகுல, கனவெரல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

பண்டாரவளை, பத்தியகெதர பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர், நமுனுகுல கனவெரல்ல தோட்டத்தின்   வசிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவியையே இவ்வாறு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. மீட்கப்பட்ட மாணவி, மருத்துவப் பரிசோதனைக்காகப் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் குறித்த மாணவியுடன் முன்னதாகக் காதல் உறவில் இருந்ததாகவும், பின்னர் அந்த உறவில் விரிசல் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மாணவியின் தந்தை தம்மைக் கண்டிப்பதாகவும் துஷ்பிரயோகம் செய்வதாகவும் அந்த மாணவி சந்தேகநபரிடம் கூறியதையடுத்து, இருவரும் அவ்விடத்தை விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

குறித்த மாணவியின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு முன்னதாகவே, சந்தேகநபர் கொழும்பில் வேலை நிமித்தம் தங்கியிருந்த தனது தாயைச் சந்திக்கச் சென்றிருந்தார். பின்னர், மாணவியும் சந்தேகநபரும் அவரது தாயும் தாங்களாகவே முன்வந்து பொலிஸில் சரணடைந்தனர்.

பதுளை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லக்சிறி விஜேசேனவின் மேற்பார்வையில், பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹன, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வெஹித தேஷப்பிரிய மற்றும் நமுனுகுல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் எஸ். சி. ஜீவரத்ன ஆகியோர் தலைமையிலான குழுவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!