news@ilakkiyainfo.com

பிரிவுகள்

15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; 24 வயது இளைஞர், பெற்றோர் கைது!

28 Feb, 2024
15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 24 வயது இளைஞர் உட்பட அவருக்கு உதவியதாக கூறப்படும் பெற்றோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அநுராதபுரம் , தந்திரிமலை பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர். கடந்த ஒக்டோபர் மாதம் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் , தனது மகள் காணாமல் போயுள்ளதாக கூறி ஓயாமடுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அநுராதபுரம் , தந்திரிமலை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த சிறுமி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காகவும் சிறுமியை பலாத்காரமாக வீட்டில் தடுத்து வைத்திருந்த குற்றத்திற்காகவும் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!