அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தாக்குதலுக்கு 3 ஆயிரத்து 270 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வைரஸ் தற்போது உலகின் 218 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.
தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டபோதும் கொரோனா வைரஸ் மாற்றமடைந்து மேலும் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்து 35 ஆயிரத்தை கடந்துள்ளது.
குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 3 ஆயிரத்து 270
பேரும், பிரேசிலில் 979 பேரும், மெக்சிகோவில் 897 பேரும் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர்.
இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 333 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, 7 கோடியே 90 லட்சத்து 23 ஆயிரத்து 5 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 2 கோடியே 16 லட்சத்து 85 ஆயிரத்து 546 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 546 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனாவில் இருந்து 5 கோடியே 55 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 17 லட்சத்து 36 ஆயிரத்து 298 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-
அமெரிக்கா - 3,34,088
பிரேசில் - 1,89,264
இந்தியா - 1,46,444
மெக்சிகோ - 1,19,495
இத்தாலி - 70,385
இங்கிலாந்து - 69,051
பிரான்ஸ் - 61,978
ஈரான் - 54,156
ஸ்பெயின் - 49,698
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!