174 பயணிகளை விமானத்தோட அழிக்கவிரும்பிய ஓமன் விமானியை விடுவிக்க கோரிய பயணிகள்: வைரலாகும் வீடியோ
இந்த விமானத்தை இந்திய விமானி ஸ்மித் மச்சார் மற்றும் ஓமன் துணை விமானி ஹமாமி அல்-ஹம்மாமி ஆகியோர் இயக்கினர்.
இந்த தாக்குதலில் இந்திய விமானி பலத்த காயம் அடைந்த நிலையிலும், மன உறுதியுடன் செயல்பட்டு விமானி அறையின் கதவை திறந்தார்.
இதையடுத்து விமானி அறையில் உள்ளே வந்த பயணிகள் ஓமன் துணை விமானியின் கையை கட்டினர்.
இந்த 45 நிமிட காணொளியை தற்போது தனியார் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இந்த காணொளியில் ஹம்மாமி விமானத்திற்குள் முழங்காலிட்டு நிற்பதும், அவரின் கைகள் பின்புறமாக கட்டப்பட்டிருப்பதும் பதிவாகியுள்ளது.
மேலும் துணை விமானியின் சட்டை முழுவதும் ரத்த கறையுடன் இருப்பதும், அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.
இதையடுத்து ஓமன் துணை விமானியை விடுவிக்குமாறு சில பயணிகள் கூறியபோது, அவரை காவல்துறையிடம் மட்டுமே ஒப்படைப்போம் என ஊழியர்கள் கூறுவது இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த காணொளியில் இன்னும் ஒரு மணி நேரம், இன்னும் 40 நிமிடங்கள் மற்றும் இன்னும் ஐந்து நிமிடங்கள் என ஊழியர்கள் பேசுவதும் இடம்பெற்றுள்ளது.
காவல்துறை விமானத்திற்கு வரும் வரையில், அவரின் கை கட்டப்பட்டுள்ளதும் பதிவாகியுள்ளது.
இதையடுத்து ப்ளைதுபாய் குழுவினர் சிலர், ஓமன் துணை விமானியை விடுவிக்க வேண்டும் என்று தாங்கள் விரும்பியதாக பேட்டி ஒன்றில் தெரிவித்தனர்.
ஆனால் எந்த சூழ்நிலையிலும் ஓமன் துணை விமானியை நாங்கள் விடுவிக்க மாட்டோம் என இஸ்ரேல் பயணிகள் பிடிவாதமாக இருந்ததாகவும், நாங்கள் விமானியை கொல்ல விரும்பவில்லை, மாறாக விமானி எங்களை கொல்லாமல் இருக்க விரும்புகிறோம் என பயணி ஒருவர் கூறுவதும் இடம்பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து சில தாக்குதல்களுக்கு உள்ளான ஓமன் துணை விமானியை உயிருடன் இருக்க வேண்டும் என்பதற்காக, அவருக்கு செயற்கை ஆக்சிஜன் தருவதும் காணொளியில் இடம்பெற்றுள்ளது.
— aaa (@ghjjjnfg) October 4, 2026

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!