யாழில் மதுபோதையில் இருந்த பொலிஸார் பொதுமக்கள் மீது தாக்குதல்
24 Mar, 2026
கமாலுதீன்
சரி, இதனால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு என்ன பலன் என்று பிரபல ஏற்றுமதியாளர் கே.எஸ்.கமாலுதீனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்து சொன்னார் அவர்.
"இதுவரையிலும் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் தாங்கள் ஏற்றுமதி செய்யும் அல்லது இறக்குமதி செய்யும் பொருள்கள், சேவைகளுக்கான பரிவர்த்தனையை டாலரில் மேற்கொண்டு வந்தார்கள்.
Exchange Earners Foreign Currency (EEFC) என்ற கணக்கு மூலமாக டாலரில் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன.
ஏற்றுமதி செய்த பொருள்களுக்கு டாலராகப் பணத்தை வாங்கி இந்தக் கணக்கில் டாலரை இருப்பு வைத்து இறக்குமதி செய்யும் போது அந்த டாலரைப் பயன்படுத்தியே பொருள்கள், சேவைகளை வாங்கி வருகிறோம்.
தற்போது 18 நாடுகளுடன் இந்திய ரூபாயிலேயே வர்த்தகம் மேற்கொள்ளலாம் என்ற முயற்சியினால் வர்த்தகர்கள் டாலரை நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை.
மேலும், டாலரில் வர்த்தகம் செய்யும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பின் ஏற்ற இறக்கத்தைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.
ஏனெனில் டாலர் மூலம் வர்த்தகம் செய்யும்போது கரன்ஸி மதிப்பு ஏற்ற, இறக்கத்தால், அதிக பலனை அடைய நமக்குப் பணம் தருபவர்கள் நினைப்பார்கள். ஆனால், இப்போது ரூபாயிலேயே வர்த்தகம் செய்யலாம் என்கிறபோது வர்த்தகப் பரிவர்த்தனைகள் மிகவும் விரைவாக நடைபெறும்.
அது மட்டுமல்லாமல், ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்ளும்போது ரூபாயின் மதிப்பு சர்வதேச அரங்கில் வலுவடையும். அவ்வாறு ரூபாய் மதிப்பு வலுவடையும் பட்சத்தில் நம்முடைய பொருளாதாரமும் ஒட்டுமொத்தமாக வலுவடையும் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும், நம்மிடம் இருக்கும் டாலர் இருப்பைக் குறையாமல் சிறப்பாக நிர்வகிக்க முடியும். டாலர் ரிசர்வ் மீதான அழுத்தங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
''தனிநபர்கள் ரீடெய்ல் பரிவர்த்தனைகளுக்கு ரூபாயை மற்ற நாடுகளில் பயன்படுத்த முடியாது. பிற நாடுகளில் அந்தந்த நாடுகளின் நாணயங்களை மாற்றிக்கொண்டுதான் செலவுகளை மேற்கொள்ள முடியும்...''
அதே சமயம், டாலரில் வர்த்தகம் செய்யும்போது ரூபாய் மதிப்பு ஏற்ற இறக்கத்தைப் பார்த்து அதற்கேற்ப டாலரைப் பயன்படுத்தும்போது கிடைக்கக்கூடிய லாபம் ரூபாயில் வர்த்தகம் செய்யும்போது இருக்காது.
இறக்குமதி செய்யும்போது கைவசம் இருப்பில் இருக்கும் டாலரை வைத்தே இறக்குமதி செய்வோம். ஆனால், ரூபாயில் வர்த்தகம் செய்ய ஆரம்பித்த பிறகு இறக்குமதி செய்ய அதிகளவு ரூபாயைக் கொடுக்க வேண்டி வரலாம்.
தற்போது ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்துக்கு மட்டுமே ரூபாயில் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றபடி, தனிநபர்கள் ரீடெய்ல் பரிவர்த்தனைகளுக்கு ரூபாயை மற்ற நாடுகளில் பயன்படுத்த முடியாது. பிற நாடுகளில் அந்தந்த நாடுகளின் நாணயங்களை மாற்றிக்கொண்டுதான் செலவுகளை மேற்கொள்ள முடியும்" என்று அவர் கூறினார்.
ஏற்றுமதி பிசினஸ்
18 நாடுகளுடனான ரூபாய் அடிப்படையிலான வர்த்தகம் பிற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும்போது ரூபாயின் மதிப்பு உலக அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறலாம். தற்போது அமெரிக்காவின் டாலர், ஐரோப்பிய யூனியனின் யூரோ, ஜப்பானின் யென் ஆகிய நாணயங்கள் சர்வதேச அளவில் மதிப்புமிக்க கரன்சிகளாக இருக்கின்றன. அந்த வரிசையில் இந்திய ரூபாயும் இன்னும் சில ஆண்டுகளில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கலாம்!
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!