கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாப சுவாமி கோயில் நிர்வாகம் யாருக்கு எனத் தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
``திருவிதாங்கூர் மன்னரின் இறப்பு அரச குடும்பத்தின் சொத்துகள் மற்றும் உரிமைகளைப் பாதிக்காது. எனவே, கேரள பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகத்தின் மீது திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு உரிமை உள்ளது.
அந்தக் கோயிலின் நிர்வாகத்தை மேற்பார்வையிட திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையில் ஒரு இடைக்கால குழுவை அமைக்க, உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது.
மேலும், அந்தக் கோயிலில் இருக்கும் ரகசிய அறைகள் திறக்கப்படுவது தொடர்பாக இடைக்கால குழு முடிவு செய்யும்.
இடைக்கால குழுவில் இந்து அல்லாதவர்கள் இடம்பெறக் கூடாது. இடைக்கால குழுவின் முடிவே இறுதியானது" என அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து கருத்து கூறிய கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், "சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம்.
தீர்ப்பின் முழு விபரங்களும் இன்னும் கிடைக்கவில்லை. முழு விபரங்களையும் பெற்ற பிறகு அதில் கூறியுள்ளபடி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவோம்" என்றார். இந்தத் தீர்ப்பை வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பாக மன்னர் குடும்பமும் கேரள மக்களும் பார்க்கிறார்கள்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆரம்பகால தலைமையிடமாக விளங்கியது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனை. ஸ்ரீபத்மநாப சுவாமிக்கு சொந்தமான நாடு இது.
கடவுளின் பிரதிநிதியாக சமஸ்தானத்தை மன்னர் ஆளுகிறார் என்பதை மனதில் நிறுத்தியே திருவிதாங்கூர் மன்னர்கள் ஆட்சி நடத்திவந்தனர்.
பத்மநாபபுரம் அரண்மனையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தபோது திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலை பிரதானமாகக் கொண்டிருந்தது மன்னர் குடும்பம்.
பின்னர், பாதுகாப்பு போன்ற சில காரணங்களுக்காகத் திருவிதாங்கூர் சமஸ்தான தலைமையகம் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது.
புதிய அரண்மனை மட்டுமல்லாது திருவட்டாறு கோயிலில் இருப்பதுபோன்று அனந்த சயன மூலவருடன் ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலும் திருவனந்தபுரத்தில் நிர்மாணிக்கப்பட்டது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!