அமெரிக்காவை மிரளவிடும் ஏவுகணைப் படை.. ஈரானின் புதிய "Missile city".. அப்படி என்ன special?
23 Nov, 2026
THAAD interceptor
தாட் இன்டர்செப்டார்ஸ்: பெயரில் இருப்பதை போலவே, இது இடைமறிப்பு ஏவுகணைகள்தான். ஈரான் அனுப்பும் பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை தாக்கி அழிக்க இந்த ஏவுகணைகள் ரொம்பவும் முக்கியம். ஆனால், இதன் உற்பத்தி மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
Patriot missile
பேட்ரியாட் ஏவுகணைகள்: இது குறுகிய தூரம் மற்றும் நடுத்தர தூரம் ஏவுகணைகளை தடுக்கும் பாதுகாப்பு அரண். இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை பயன்படுத்த இது ரொம்பவும் முக்கியம். பிரச்சனை என்ன? இவை அனைத்தும் அதிநவீன ஆயுதங்கள். இதை தயாரிக்க மாதக்கணக்கிலும், ஆண்டு கணக்கிலும் ஆகும். ஆனால், போரில் ஒரே நாளில் இவை முழுவதுமாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் தேவையான ஆயுதங்கள், தேவையான நேரத்தில் கிடைக்கவில்லை. இதில் உள்ள இன்னொரு பிரச்சனை என்னவெனில், ஏற்கெனவே உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைனுக்கு அமெரிக்க அதிக ஆயுதங்களை விநியோகித்திருக்கிறது. இப்போது ஈரானுடன் நேரடி போரில் ஈடுபட்டிருப்பதால் ஆயுத பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இஸ்ரேலை கைவிடும் அமெரிக்கா ஈரான் ஒரே நேரத்தில் அதிக அளவில் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் ஏவுகிறது. இது அனைத்தும் விலை மலிவானது. ஆனால், இதை தடுக்க அமெரிக்கா கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஏவுகணைகளை பயன்படுத்துகிறது. இப்படியே ஆயுத கையிருப்பு காலியானால், இஸ்ரேலுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று அமெரிக்கா கைவிட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!