சட்டத்தின் முன் சரணடையும் அரசியல் அதிகார துஷ்பிரயோகம்;கம்பி எண்ணப்போகும் ராஜபக்ஸ குடும்பத்தினர்
18 Sep, 2026
யுத்தம் இடம்பெற்றபோது அமைதியாக அதை பார்த்துக்கொண்டு தாங்கள் இருக்கவில்லை என்றும் 2009 ஆம் ஆண்டில் விடுதலை புலிகள் மற்றும் அரசாங்கத்துடன் தாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதன்போது இந்திய மற்றும் அமெரிக்க ஆதரவுடன் அனைத்து தமிழ் பொதுமக்கள், விடுதலை புலிகள் அமைப்பின் போராளிகள் மற்றும் பணியாளர்களை வெளியேற்ற முன்வந்தபோதும் பிரபாகரன் அதை தடுத்துவிட்டார் என்றும் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தார். அத்தோடு ஏப்ரல் 2009 இல் பிரபாகரன், தமிழ் மக்கள் மற்றும் விடுதலை புலி வீரர்கள் மற்றும் பணியாளர்களை வெளியேற்றுவது உள்ளிட்ட போருக்கு ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முடிவை மறுத்துவிட்டார். இன்னொன்று மே மாதம் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் பாலசிங்கம் நடேசன் மற்றும் புலிதேவன் ஆகியோர் சரணடைய ஒப்புக்கொண்டபோதும் “வெள்ளைக் கொடி” சம்பவத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர் என்றும் இந்த இரண்டு உண்மைகளும் மறுக்க முடியாதவை என்றும் தெரிவித்தார். 2009 ஆம் ஆண்டின் முற்பகுதியில் போரை முடிவுக்கு கொண்டுவர பிரபாகரன் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்றும் இது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் மற்றும் விடுதலை புலி உறுப்பினர்களின் உயிரைக் காப்பாற்றியிருக்கும் என்றும் எரிக் சொல்ஹெய்ம் கூறினார். அந்த நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, இந்தியா அனைத்தும் ஆயுதங்கள் இல்லாமல் அனைவரையும் வெளியேற்ற எங்களுக்கு உதவ தயாராக இருந்தன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.Both facts are indisputable. ? * Prabhakaran in April 2009 refused an organized end to the war including evacuation of Tamil civilians and LTTE soldiers & cadres. * Nasesan and Pulee May 17 asked to surrender to government and was brutally murdered in the “white flag” incident
— Erik Solheim (@ErikSolheim) August 24, 2020
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!