உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
''அட்சய திரிதியை நாளில் ஒரு சவரன் தங்க நகை 38,528 ரூபாய்க்கும் ஒரு கிராம் தங்கம் 4,816 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
அதேநேரம் மாலையில் ஒரு சவரன் தங்க நகை 38,368 ரூபாய்க்கு விற்பனையானது. மக்களிடம் வரவேற்பு அதிகம் இருந்ததால் நள்ளிரவு வரையில் வியாபாரம் நடந்தது.
இதனால் கடந்த மூன்று ஆண்டுகளை ஒப்பிடும்போது 30 சதவீத விற்பனை அதிகரித்துள்ளது' என்கிறார்,
சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி. மேலும், 'ஒரேநாளில் 18 டன் தங்கம் அளவுக்கு விற்பனையானது, இதன் மதிப்பு ஒன்பதாயிரம் கோடி ரூபாய்,'' எனவும் அவர் தெரிவித்தார்.
விற்பனை அதிகரித்தது ஏன்?
''தங்கம் விற்பனை அதிகரித்துள்ளதை எப்படிப் பார்ப்பது?'' என பொருளாதார ஆலோசகர் நாகப்பனிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம். '' தங்கக் கவுன்சிலின் புள்ளிவிபரப்படி,
கடந்த ஆண்டு தங்கம் இறக்குமதி என்பது 36 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் பார்த்தால் இறக்குமதி என்பது 18 சதவீதம் குறைந்துவிட்டது.
கடந்த ஆண்டு தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு வளர்ச்சி இருந்தாலும் இறக்குமதி குறைந்துள்ளது'' என்கிறார்.
தொடர்ந்து பேசிய நாகப்பன், '' தங்கம் விலை இறங்கும்போதெல்லாம் சீனா நிறைய வாங்குகிறது. தங்கம் விலை ஏறும்போது அவர்கள் வாங்குவதில்லை.
அந்தக் காலகட்டத்தில் தங்கம் விலை என்பது சற்று இறங்குகிறது. கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்து இதுபோன்று நடந்து வருகிறது.
அதேநேரம், தங்கம் விலை பெரிதாக சரிந்துவிடாது. சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி அதிகமாக நடக்கிறது. டாலரை நம்பியிருக்க வேண்டிய சூழல் வரக்கூடாது என்பதால் அதனை தங்கத்துக்கு ஈடாக சீனா மாற்றி விடுகிறது. ''
''உலகளவில் சீனாவும் இந்தியாவும்தான் அதிகப்படியாக தங்கத்தைக் கொள்முதல் செய்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாக தங்கம் வாங்குவதைவிட கோல்டு பாண்டுகளில் இளம் வயதினர் ஆர்வம் காட்டுகின்றனர்.
நகையாக வாங்கினால் அது விலை ஏறினாலும் இறங்கினாலும் விற்க மாட்டார்கள். கோல்டு பாண்டுகளை வாங்குகிறவர்கள், அது சற்று ஏறினால் விற்றுவிடுவார்கள். அந்தவகையில், தங்கத்தை முதலீட்டுக்கான ஒன்றாகப் பார்ப்பதும் நல்லதுதான்'' என்கிறார்.
''கடந்த ஆண்டுகளைவிட தங்கம் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார்களே?'' என்றோம்.
''கடந்த ஆண்டு மே மாதம் கோவிட் தொற்று உச்சத்தில் இருந்தது. அதுவும் ஆஸ்பத்திரிகளில் அறை கிடைக்காமல் மக்கள் பெரும் துன்பத்தில் இருந்தனர்.
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கூறியும்கூட சென்னையில் பலருக்கும் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில் கடைகளே திறக்கப்படவில்லை. எனவே, இந்த ஒப்பீடு செய்வது சரியானதல்ல'' என்கிறார்.
மூன்று மாவட்டங்களில் அதிகம்
'' 2020-2021 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து கோவிட் இருந்ததால் மக்களுக்கு வருவாய் இருந்தும் செலவு செய்ய முடியவில்லை.
இலங்கையின் பொருளாதார நிலை கடும் பாதிப்பில் உள்ளது. அங்கு இருப்பவர்களிடம் பணம் இருந்தும் மதிப்பு இல்லை. அவர்களுக்கு தங்கம்தான் கை கொடுக்கிறது.
அங்குள்ள பணத்தின் மதிப்புக்கு ஒரு சவரன் தங்கம் என்பது 1,20,000 ரூபாய் என இருந்தது. தற்போது 2,60,000 ரூபாயாக மாறிவிட்டது.
அதனால் எப்போதும் தங்கம்தான் கை கொடுக்கும். யுக்ரேன் போரால் 5 மில்லியன் மக்கள் வெளியே சென்றுவிட்டனர்.
அவர்கள் தங்கள் கைகளில் தங்கத்தைக் கொண்டு சென்றுள்ளனர். இதனால் எங்கு சென்றாலும் அவர்கள் மாற்றிக் கொள்ளலாம்'' என்கிறார், சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி.
தொடர்ந்து பேசியவர், '' இந்தியாவில் ஆண்டுக்கு 800 முதல் 900 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. மறுசுழற்சிக்கு என 400 முதல் 500 டன் தங்கம் உள்ளது.
மக்களின் பயன்பாடு என்பது ஆண்டுக்கு 1,300 முதல் 1,500 டன் வரையில் உள்ளது. மக்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் என்பது அதிகரித்துள்ளது.
கோல்டு பாண்டுகளை பேப்பராக வாங்கும்போது ஓர் அச்சம் உள்ளது. அதுவே நகையாகப் பார்க்கும்போது மக்களுக்கு நம்பிக்கை வருகிறது'' என்கிறார்.
மேலும், '' அட்சய திரிதியை நாளில் சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களில்தான் தங்க நகை விற்பனை அதிகம் நடந்துள்ளது. அதேநேரம், குறைவான விற்பனை என எந்த மாவட்டத்திலும் பதிவாகவில்லை'' என்கிறார் ஜெயந்திலால் சலானி.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!