ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
"இந்தப் படத்தில் கமல் கர்ணன் என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடைய மகனை ஒரு கும்பல் கொன்றுவிட, பழிவாங்க களமிறங்குகிறார் அவர்.
ஒரு சாதாரண பழிவாங்கும் கதையைப் போல துவங்குவது, கர்ணன் பாத்திரத்தால் ஒரு லட்சியமாக மாற்றப்பட்டு நிறைவேறுகிறது.
படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடுவது மிக நீளமாகத் தோன்றினாலும் இந்தப் படத்தின் மூலம் புதிய தலைமுறை ரசிகர்களுக்கு கமலின் பன்முகத்தன்மையின் சில சாயல்களை எடுத்துக் காட்டியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
ஒரு மகா கலைஞன் பல ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் மின்னுவதைப் பார்ப்பதே மன நிறைவைத் தருகிறது" என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ்.
"விக்ரம் படத்தின் முதல் பாதி மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. இந்தப் பாதியில்தான் கொலைகள் குறித்து அறியவரும் அமரும் அவரது அணியினரும் கொலையாளிகளைத் தேட ஆரம்பிக்கிறார்கள்.
இந்தப்பகுதியில் கமல் மிகக் குறைந்த நேரமே வருகிறார் என்றாலும்கூட அவரது இருப்பை உணர முடிகிறது.
விசிலடித்து கொண்டாடக்கூடிய ஒரு தருணத்தில் இடைவேளை வருகிறது. இந்தத் தருணத்தில் அறிமுகமாகும் விஜய் சேதுபதி மாஸ்டர் படத்தில் விட்ட இடத்தில் தொடர்கிறார்.
ஆக்ஷன் காட்சிகள் மிகச் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன. கமலும் ஃபகத் பாசிலும் இடத்தை மாற்றிக்கொள்வது போன்ற ஒரு காட்சியில் ஜூம் இன்- ஜூம் அவுட் பயன்படுத்தப்பட்டிருப்பது சிறப்பாக இருக்கிறது." என்று குறிப்பிடுகிறது The Times of Indiaவின் விமர்சனம். ஐந்துக்கு 3 நட்சத்திரங்கள் இந்தப் படத்திற்கு வழங்கப்பட்டிருக்கின்றன.
நான்கு படங்களையே எடுத்திருக்கும் லோகேஷ் கனகராஜ் புதிய Cinematic Universeஐயே உருவாக்கியிருப்பதாகச் சொல்கிறது The Hindu நாளிதழ்.
அதன் முதல் முயற்சியாக பல்வேறு சாத்தியங்களுடன் கூடிய விக்ரம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஒரு உண்மையான சினிமா அனுபவத்தைக் கொடுப்பது குறித்து சரியான திசையில் இதற்கு முன்பு யாரும் பேசியதில்லை" என்கிறது அந்த நாளிதழ்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!