ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
ஹன்சிகா
தன்னுடன் இணைந்து ஈவென்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி நடத்தி வரும் தொழிலதிபர் சோஹைல் கதுரியா என்பவரை ஹன்சிகா திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.
இது தொடர்பாக ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோஹைல் கதுரியா ஈபிள் டவர் அருகில் நின்று கொண்டு தன் காதலைத் தெரிவிப்பது போன்ற படத்தைப் பகிர்ந்துள்ளார்.
கீழே 'என்னைத் திருமணம் செய்து கொள்வாயா' என்ற வாசகமும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஹன்சிகா வெள்ளை நிற ஆடையில் ஜொலிக்க, சோஹைல் வெள்ளை சட்டையும் கறுப்பு கோட்டும் அணிந்திருந்தார்.
ஹன்சிகா இதனை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தவுடன் சோஹைல் 'ஐ லவ் மை லைப்' என்று கமென்ட் பகிர்ந்துள்ளார்.
இருவரும் டிசம்பர் 2 - 4 ராஜஸ்தானில் திருமணம் செய்து கொள்கின்றனர். அதாவது 2ம் தேதி சடங்குகள் தொடங்கி 4ம் தேதி திருமணம் நடக்கிறது.
இத்திருமணம் குறித்த செய்தி வெளியானவுடன் பாலிவுட் நண்பர்கள் போன் மூலமும், சமூக வலைதளம் மூலமும் ஹன்சிகாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திருமணத்திற்கு சிம்புவிற்கு அழைப்பு வருமா என்று தெரியவில்லை. சோஹைல் சொந்தமாக டெக்ஸ்டைல் கம்பெனி நடத்திவருகிறார்.
அதன் மூலம் சர்வதேச நாடுகளுக்கு ஆடை ஏற்றுமதி செய்து வருகிறார். ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் திருமணத்திலும் சோஹைல் கலந்து கொண்டார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!