இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
இந்தியா, தாய்லாந்து, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் சுமார் 30 கொலைகள் வரை சார்லஸ் செய்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அதில் 12 கொலைகள் மட்டுமே தற்போது வரை நிரூபணம் ஆகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவர் செய்த குற்றத்திற்காக இந்திய சிறையில் தண்டனை கைதியாய் 1976 ஆம் ஆண்டு அடைக்கப்பட்டிருந்தார். 1986 ஆம் ஆண்டு சிறையில் இருந்து தப்பிய சார்லஸை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
1997 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் சிறைத் தண்டனை அனுபவித்த சார்லஸ் சோப்ராஜை நேபாள நாட்டில் நடந்த கொலைக்காக கைது செய்யப்பட்டு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு முதல் நேபாள நாட்டு சிறையில் அடைக்கப்பட்ட சூழலில், தற்போது அவருக்கு இதய பாதிப்பு உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு நேபாள நாட்டின் உச்சநீதிமன்றம் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.
அதன்படி இன்னும் சில தினங்களில் அவர் விடுதலையாக உள்ளார். சார்லஸ் சோப்ராஜூக்கு தற்போது 78 வயதாகும் சூழலில், ஆசியாவை அலற வைத்த குற்றவாளி பற்றிய செய்தி, தற்போது பலரையும் பதற்றம் அடைய வைத்துள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!