உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
வரதட்சணை
அதாவது மற்ற சமூகங்களில் மணப்பெண் வீட்டிலிருந்து வரதட்சணை தருவது வழக்கம். ஆனால் இந்த சமூகத்தில் மாப்பிள்ளை வீட்டிலிருந்து மணப்பெண் வீட்டிற்கு வரதட்சணை கொடுக்க வேண்டும். அப்போதுதான் திருமணமே நடக்கும்.
எனவே மணப்பெண் வீட்டிற்கு ரூ.1 லட்சம் வரதட்சணையாக கொடுப்பதாக பேசி முடிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் திருமணத்தன்று காலையில் மணமேடையில் மாப்பிள்ளை இருக்க, பெண் அழைப்பு நடந்திருக்கிறது.
முகூர்த்த நேரம் முடிய இன்னும் கொஞ்ச நேரம் மட்டுமே இருக்கையில் கடைசி வரையில் பெண் மணமேடைக்கு வரவேயில்லை.
ரூ.2 லட்சம்
மாப்பிள்ளை வீட்டிலிருந்து பெண் எங்கே என்று கேள்வியழுப்பியுள்ளனர். என்ன கேள்வியெழுப்பியும் யாரும் கண்டுகொள்ளவில்லை.
எனவே கடுப்பான மாப்பிள்ளையின் பெற்றோர் யசோதாவின் வீட்டிற்கு சென்று ஏன் இன்னும் திருமண மண்டபத்திற்கு வரவில்லை என்று கேட்டுள்ளனர்.
அப்போதுதான் அங்கு ட்விஸ்ட் நடந்திருக்கிறது. அதாவது, "நீங்கள் கொடுக்கும் வரதட்சணை போதவில்லை.
எனவே அதனை ரூ.2 லட்சமாக கொடுக்க வேண்டும். அப்போதுதான் நான் திருமண மண்டபத்திற்கு வருவேன்" என்று கூறியுள்ளார். இதனை எதிர்பார்க்காத மாப்பிள்ளை வீட்டார் சமாதானம் பேசியுள்ளனர்.
பஞ்சாயத்து
"ஊர் முன்னிலையில் ரூ.1 லட்சம் கொடுப்பதாகதானே பேசினோம், இப்போது வந்து 2 லட்சம் கேட்டால் எங்கே போவது?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆனால் யசோதா தன்னுடைய முடிவில் கறாராக இருந்துள்ளார். இதனையடுத்து ஆத்திரமடைந்த மாப்பிள்ளை வீட்டார் காவல் நிலையத்தை அனுகியுள்ளார்.
பின்னர் இரு வீட்டார் தரப்பிலும் சமாதானம் பேசப்பட்டுள்ளது. கடைசியாக திருமணத்திலிருந்து தாங்கள் விலகிக்கொள்வதாக மாப்பிள்ளை வீட்டார் அறிவித்துள்ளனர்.
எனவே இத்திருமணம் பாதியில் நின்றிருக்கிறது. வரதட்சணை பிரச்னை காரணமாக பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்தியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!