24 வயதுடைய தாய் கைக்குழந்தையுடன் மாயம்! வீட்டில் இரத்தக் கறைகள் ! சந்தேகத்தில் உறவினர் கைது !
அங்குருவாதோட்டை, உருதுதாவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் தனது 11 மாத பெண் குழந்தையுடன் காணாமல் போயுள்ளதாக அங்குருவத்தோட்ட பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண்ணின் உறவினர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பெண்ணின் வீட்டில் சில மங்கலான இரத்தக் கறைகளும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் நேற்று முன்தினம் நேற்று (18) பிற்பகல் முதல் காணாமல் போயுள்ளதாக கணவர் அங்குருவாதொட்ட பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்படி விசாரணையை ஆரம்பித்த பொலிஸ் அதிகாரிகள் நேற்று பிற்பகல் குறித்த வீட்டை சோதனையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு, குளிர்சாதனப் பெட்டியின் கதவிலும், வீட்டின் தரையிலும் பல மங்கலான இரத்தக் கறைகளைபொலிஸார் அவதானித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தனது சகோதரியின் கணவர் மீது சந்தேகம் இருப்பதாக காணாமல் போன பெண்ணின் கணவர் கூறுகிறார்.
இது குறித்து அவர் பொலிஸில் புகார் அளித்ததையடுத்து, பொலிஸார் அந்த நபரை கைது செய்துள்ளனர். அவர் ஒரு முன்னாள் இராணுவ வீரர் என்று தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!