தீவிரமாகும் எரிபொருள் நெருக்கடி
19 Oct, 2026
20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெத்லேகம் நகரின் ஒரு பகுதி
1948 இல் இஸ்ரேலிய சுதந்திரப் போர் தொடங்குவதற்கு முன் அதற்கு தயாரான ஹகானா (யூத அண்டர்கிரவுண்ட்) போராளி
ஐ.நா. சபையில் வாக்கெடுப்பு
அந்த நிலையில்தான், பாலத்தீனத்தை யூதர்கள் மற்றும் அரேபியர்களுக்கு என தனித்தனி நாடுகளாக பிரிப்பது தொடர்பாகவும், ஜெருசலேம் சர்வதேச நகராக அறிவிக்கப்படுவது குறித்தும் 1947 இல் ஐக்கிய நாடுகள் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்தத் திட்டத்தை யூதர்கள் தரப்பு தலைவர்கள் ஏற்றுக் கொண்ட போதிலும், அரேபியர்கள் தரப்பினர் நிராகரித்துடன், அத்திட்டத்தை அவர்கள் ஒருபோதும் செயல்படுத்தவில்லை.
மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவ வீரருக்கும், பாலத்தீனருக்கும் இடையே நிகழ்ந்த மோதல்
இஸ்ரேல் உருவாக்கமும், பாலத்தீனர்கள் வெளியேற்றமும்
பாலத்தீனத்தை இரு தனி நாடுகளாக பிரிக்கும் விவகாரத்தில் தீர்வு எட்டப்பட முடியாததையடுத்து, 1948 இல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
‘இஸ்ரேல்’ தனி நாடு உருவாக்கப்பட்டதாக யூத தலைவர்கள் பிரகடனப்படுத்தினர். யூதர்களின் இந்த நடவடிக்கையை பாலத்தீனர்கள் கடுமையாக எதிர்த்ததையடுத்து இருதரப்புக்கும் இடையே போர் வெடித்தது. அருகில் இருந்த அரபு நாடுகளின் படைகளும் போரில் ஈடுபட்டன.
பல்லாயிரக்கணக்கான பாலத்தீனியர்கள் உயிருக்கு அஞ்சி தங்கள் நிலத்தை விட்டு வெளியேறினர். அவ்வாறு செய்யாதவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டனர். இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை “பேரழிவு” என்று பாலத்தீனர்கள் குறிப்பிட்டனர்.
ஓராண்டில் யூதர்கள் மற்றும் பாலத்தீனர்களுக்கு இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பு வெளியானபோது பாலத்தீனத்தின் பெரும்பகுதியை இஸ்ரேல் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது.
இஸ்ரேல் எனும் தனி நாடு உருவாக்கம், ஐரோப்பா மற்றும் அரபு நாடுகளில் வாழ்ந்து வந்த யூதர்களின் குடியேற்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
பல்வேறு காலகட்டங்களில் இஸ்ரேல் -பாலத்தீன எல்லைகள்
மேற்குக் கரை மற்றும் காசா ஆக்கிரமிப்பு பகுதிகள்
பாலத்தீனத்தில் ஜோர்டானால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பகுதி தான் ‘மேற்குக் கரை’. ஜோர்டான் நதியின் மேற்கே அமைந்துள்ள இப்பகுதி, வடக்கு, தெற்கு மற்றும் மேற்கே இஸ்ரேலை எல்லையாக கொண்டுள்ளது. இப்பகுதியின் கிழக்கே ஜோர்டான் அமைந்துள்ளது.
இதேபோன்று எகிப்தின் எல்லையில் அமைந்திருந்த ஒரு சிறிய கடலோர பகுதியை அந்நாடு ஆக்கிரமித்தது. இந்தப் பகுதி ‘காசா’ என்று அழைக்கப்படுகிறது.
1967 இல் ஆறு நாள் நடைபெற்ற போரின்போது கிழக்கு ஜெருசலேமிற்கு வருகை தந்த இஸ்ரேலிய இராணுவத் தளபதிகள்
இரண்டான ஜெருசலேம்
இதனிடையே, இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் படைகளால் ஜெருசலேம் நகரம் இரண்டாக பிரிக்கப்பட்டது. அந்த நகரின் மேற்கு பகுதியில் இஸ்ரேலிய படைகளும், கிழக்கே ஜோர்டன் படைகளும் ஆதிக்கம் செலுத்தி வந்தன.
இந்த விவகாரத்தில் இஸ்ரேல் மற்றும் ஜோர்டனுக்கு இடையே சமாதான உடன்படிக்கை ஏற்படாததால், பல ஆண்டுகளாக இரண்டு நாடுகளுக்கும் இடையே சண்டை நடைபெற்று வந்துள்ளது.
பாலத்தீனத்தை தாண்டி நீண்ட இஸ்ரேலின் கரங்கள்
1967 இல், கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக் கரை, சிரியாவின் பெரும்பாலான பீடபூமி பகுதி, எகிப்தின் சினாய் தீபகற்பம் ஆகியவற்றை இஸ்ரேல் ஆக்கிரமித்தது.
அப்போது பாலத்தீன அகதிகள் மற்றும் அவர்களின் சந்ததியினர் காசா மற்றும் மேற்குக் கரையில் வாழ்ந்து வந்தனர். மேலும் அவர்கள் அண்டை நாடுகளான ஜோர்டான், லெபனான் மற்றும் சிரியாவிலும் வசித்து வந்தனர்.
அகதிகளாக வாழ்ந்து வந்த பாலத்தீனர்களும், அவர்களின் சந்ததியினரும் அவர்களின் சொந்த நிலத்துக்கு திரும்ப இஸ்ரேல் அனுமதிக்கவில்லை. யூதர்களுக்கான ‘தனி நாடு’ என்ற பிரகடனத்திற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று கருதியதால் இஸ்ரேல் அவ்வாறு முடிவெடுத்தது.
காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் பின்னர் வெளியேறினாலும், மேற்குக் கரை பகுதி இன்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு தான் உள்ளது.
கிழக்கு ஜெருசலேம், காசா மற்றும் மேற்குக் கரையில் வசிக்கும் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நிகழ்கின்றன.
ஜெருசலேம் யாருக்கு சொந்தம்?
ஜெருசலேம் முழுவதும் தமக்கே சொந்தம் எனக் கோரும் இஸ்ரேல், அதை தலைநகராகவும் கருதுகிறது. ஆனால் ஜெருசலேத்தின் கிழக்குப் பகுதிக்கு உரிமை கோரி வரும் பாலத்தீனியர்கள், எதிர்காலத்தில் அமைய உள்ள தங்களது நாட்டின் தலைநகராகவும் அது விளங்கும் என்றும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில். ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் அங்கீகரித்தன. ஆனால், இந்த நகருக்கு உரிமைக் கோரும் விவகாரத்தில் சமாதான பேச்சுவார்த்தையின் மூலம் இறுதி முடிவு எட்டப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூறி இருந்தன.
இருப்பினும் கடந்த 50 ஆண்டுகளாக இப்பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து குடியிருப்புகளை கட்டி வருகிறது. அங்கு தற்போது ஆறு லட்சத்திற்கும் மேலான யூதர்கள் வசித்து வருகின்றனர்.
ஜெருசலேத்தில் இஸ்ரேல் குடியிருப்புகளை கட்டுவது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்று பல்வேறு நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் கூறி வருகின்றன. பாலத்தீனர்களுக்கு ஆதரவான இந்த குரல்களை இஸ்ரேல் பொருட்படுத்துவதாக தெரியவில்லை.
பாலத்தீனம் தனி நாடா?
பாலத்தீனத்தை உறுப்பினர் அல்லாத நாடாக அங்கீகரிப்பது தொடர்பாக, 2012 இல் ஐ.நா.வில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ஐ.நா. பொதுச் சபை விவாதங்களில் பாலத்தீனம் பங்கேற்கவும். ஐ.நா.வின் பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராகவும் வழிவகை செய்யும் நோக்கில் அந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், பாலத்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வாக்கெடுப்பு வழிவகுக்கவில்லை.
இருப்பினும் . ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அங்கம் வகிக்கும் 193 நாடுகளில் 70 சதவீதம் நாடுகள், பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க தங்களது ஆதரவை தெரிவித்தன.
ஆனாலும் பாலத்தீனர்கள் வசித்து வரும் கிழக்கு ஜெருசலேம், காசா மற்றும் மேற்குக் கரை பகுதிகளில் இஸ்ரேலுக்கும், பாலத்தீனத்துக்கும் இடையே மோதல் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.
இஸ்ரேலின் தற்போதைய எல்லைகள்
காசா பகுதியை கட்டுப்படுத்துவது யார்?
பாலத்தீனத்தின் காசா பகுதி தற்போது ஹமாஸ் எனப்படும் பாலத்தீன போராட்டக் குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
இஸ்ரேலுடன் பலமுறை சண்டையிட்டுள்ள ஹமாஸுக்கு, ஆயுதங்கள் கிடைக்கப் பெறுவதை தடுக்கும் நோக்கில் இஸ்ரேல் மற்றும் எகிப்து காசா எல்லைப் பகுதியில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இஸ்ரேலின் இந்த கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளின் விளைவாக தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக காசா மற்றும் மேற்குக் கரை பகுதிகளில் வாழ்ந்துவரும் பாலத்தீனர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஆனால் பாலத்தீனர்களின் வன்முறை தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ளவே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் கூறி வருகிறது.
முக்கிய பிரச்னைகள் என்ன?
இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்திற்கு இடையே தீர்க்கப்படாத பல பிரச்னைகள் உள்ளன. இவற்றில் பாலத்தீன அகதிகளின் எதிர்காலம், இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரை பகுதியில் கட்டப்பட்டுள்ள யூதக் குடியிருப்புகள் அப்படியே இருக்கலாமா அல்லது அவை அகற்றப்பட வேண்டுமா, ஜெருசலேத்தை இருதரப்பும் பங்கீட்டு கொள்வதா, இல்லையா என்பவை முக்கிய பிரச்னைகளாக உள்ளன.
இவை எல்லாவற்றையும் விட ‘இஸ்ரேல் உடன் இணைந்த பாலத்தீன நாடு’ உருவாக்கப்பட வேண்டுமா, வேண்டாமா என்பதுதான் இரு நாடுகளுக்கு இடையேயான மிக முக்கிய பிரச்னையாக நீடித்து வருகிறது.
இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வு காண மூன்று தசாப்தங்களுக்கு மேலாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும், அவற்றுக்கு இதுநாள்வரை தீர்வு காணப்படவில்லை.
அமெரிக்காவின் சமாதான முயற்சிக்கு பலன் கிடைத்ததா?
இஸ்ரேல் -பாலத்தீனம் இடையேயான பிரச்னைகளுக்கு இன்று இல்லையென்றாலும், எதிர்காலத்தில் தீ்ர்வு காணப்பட்டுவிடும் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தபோது, இஸ்ரேல்- பாலத்தீன பிரச்னைகளை தீர்ப்பதற்கான அமைதி திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இருதரப்பு பிரச்னைகளுக்கு தீர்வு காண மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய இந்த முயற்சியை, ‘இந்த நூற்றாண்டின் உடன்படிக்கை’ என்று இஸ்ரேல் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகு வர்ணித்திருந்தார்.
ஆனால், அமெரிக்காவின் அமைதி முயற்சி ஒருதலைபட்சமானது எனக் கூறி அதை நிராகரித்த பாலத்தீனர்கள், இதனால் தங்களுக்கு எந்த பயனும் இல்லை என்றும் தெரிவித்தனர்.
எனவே இஸ்ரேல் -பாலத்தீனம் இடையேயான சிக்கலான பிரச்னைகளுக்கு இருதரப்பினரும் ஏற்றுகொள்ளும்படியாக தீர்வு காணப்படும் வரை, இஸ்ரேல்- பாலத்தீனம் மோதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என்பதே தற்போதைய யதார்த்த நிலையாக உள்ளது.
மார்ச் 1948 இல் யூத ஏஜென்சியின் தற்காப்புப் படையான ஹகானாவின் போராளிகள் மீது நேச நாட்டு அரபு லெஜியன் படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!