பறந்துகொண்டிருந்த சர்வதேச விமானத்தின் சக்கரமொன்று கழன்று வீழ்ந்த சம்பவம் அமெரிக்காவில் நேற்று இடம்பெற்றுள்ளது.
சான்பிரான்சிஸ்கோ சர்வதேச விமானநிலையத்திலிருந்து ஜப்பானை நோக்கி புறப்பட்ட யுனைடெட் எயார்லைன்ஸ் விமானமொன்றிலிருந்தே இவ்வாறு சக்கரம் கழன்றது.
போயிங் 777 ரகத்தைச் சேர்ந்த அவ்விமானம் தரையிலிருந்து கிளம்பிய நிலையில் அதன் சக்கரமொன்று கழன்று, விமான நிலையத்தின் வாகனத் தரப்பிடப் பகுதியில் வீழ்ந்தது.

அதையடுத்து அவ்விமானம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஜப்பானின் ஒசாக்கா நகரை நோக்கி புறப்பட்ட அவ்விமானத்தில் 249 பேர் இருந்தனர் என யுனைடெட் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
போயிங் 777 விமானத்தின் ஒவ்வொரு சக்கரத் தொகுதியிலும் 6 சக்கரங்கள் இருப்பதாகவும், ஏதேனும் ஒரு சக்கரம் சேதமடைந்தால் அல்லது தொலைந்தாலும் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கக் கூடிய வகையில் அவ்விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் யுனைடெட் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!