தி ஹண்ட் (The Hunt) தொடர் சொல்வதுபோல ஜெயலலிதாவை கொல்ல சிவராசன் திட்டமிட்டாரா?
24 Aug, 2026
சுன் இ சியன் -Sun Yat-sen1921 யூலை 3ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி, ஒரு பக்கத்தில் ஒடுக்கப்பட்ட வர்க்க மக்களுக்காகப் போராடிக்கொண்டு, மறுபக்கத்தில் சன் யாட் சன் முன்னெடுத்த தேசியக் கொள்கைகளையும் ஆதரித்து வந்தது.
Chiang Kai-shekஇத்தகைய ஒரு சூழ்நிலையில் சன் யாட் சன் மரணிக்க கோமின்டாங் கட்சியின் தலைமைக்கு சியாங் கே ஸேக் என்ற தீவிர வலதுசாரி வந்தார். அவர் மக்களுக்கு எதிராகவும், ஏகாதிபத்திய சக்திகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்டதுடன், கம்யூனிஸ்ட்டுகளுடன் முரண்பட்டு அவர்களுக்கு எதிராக உள்நாட்டு யுத்தத்தையும் ஆரம்பித்தார். இந்த உள்நாட்டு மோதல் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு 1935இல் யப்பானிய ஏகாதிபத்தியம் சீனாவின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டது. இந்த நிலைமையில், தமக்கிடையிலான மோதலை நிறுத்திக் கொண்டு, தேசத்தைப் பாதுகாப்பதற்காக யப்பானை ஐக்கியப்பட்டு எதிர்த்துப் போராட முன்வருமாறு சியாங்கே ஸேக்கிடம் சீன கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்திய போதிலும், அவர் அதனை ஏற்க மறுத்ததால், வேறு வழியின்றி சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒரு புறம் யப்பானிய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடிக்கொண்டு, மறுபுறம் சியாங்கே ஸேக்( Chiang Kai-shek) அரசையும் எதிர்த்துப் போராட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான தொடர் போராட்டம் காரணமாக 1945 இல் யப்பான் தோற்கடிக்கப்பட்டு சீனாவை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இருந்தபோதும், சியாங்கே ஸேக்கின் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரான போர் நிறுத்தப்படவில்லை. அதன் காரணமாக 1945 முதல் 1949 வரை சியாங்கே ஸேக் அரசுக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இடையில் நேரடிப் போர் நடைபெற்றது. இந்தப் போரில் அமெரிக்கா உட்பட சகல மேற்கத்தைய நாடுகளும் சியாங் அரசுக்கு சகல வழிகளிலும் உதவி புரிந்தன. இருந்தபோதும், கம்யூனிஸ்ட் கட்சி மக்களைத் திரட்டி போராட்டத்தை உறுதியாக முன்னெடுத்ததால், இறுதியாக சியாங்கின் 90 இலட்சம் படைகளும் அழிக்கப்பட்டு, அவன் தோற்கடிக்கப்பட்டு, நாட்டை விட்டுத் தப்பியோடி தாய்வான் தீவில் அடைக்கலம் புகுந்து அங்கு அமெரிக்காவின் ஆதரவுடன் பொம்மை அரசொன்றை அமைத்துக் கொண்டான். (சியாங் இறந்த பின்னரும் கூட அமெரிக்கா இன்றுவரை தாய்வான் தீவில் உள்ள பிற்போக்கு பொம்மை அரசை ஆதரித்து வருவதுடன், அந்த அரசை சீனாவுக்கு எதிராகத் தூண்டியும் வருகின்றது) 1949 ஒக்ரோபர் 1ஆம் திகதி சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் உதயமான புதிய சீனா, மாஓ தலைமையில் சோசலிசப் புரட்சியையும் நிர்மாணத்தையும் முன்னெடுத்து, ஒரு பலம் வாய்ந்த சோசலிச நாடாக உருவாகியது. அடிப்படை சோசலிச கட்டுமானத்தை உருவாக்கிக் கொண்ட சீனா, அதன் பின்னர் பலவிதமான அரசியல் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டு, இன்று ஒரு நவீன சோசலிச நாடாக வளர்ச்சி பெற்றுள்ளது. இன்றைய சீனா, உலகின் முதல்தரமான பொருளாதார - இராணுவ சக்தியாக உள்ள அமெரிக்காவுக்கு அடுத்த இரண்டாவது சக்தியாக உலக அரங்கில் வளர்ச்சி பெற்றுள்ளது. விரைவில் அது அமெரிக்காவை கடந்து முன்னேறிவிடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இன்றைய உலகின் முழுப் பொருளாதாரத்திலும் சீனாவின் பங்கு 30 சத வீதம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. சீனா தனது 140 கோடி மக்கள் தொகை முழுவதையும் வறுமைக் கோட்டுக்கு வெளியே வெற்றிகரமாக கொண்டு வந்துள்ளது. இன்றைய உலகில், உலக சமாதானத்தினதும், வளர்ச்சியினதும் அச்சாணியாக சீனா திகழ்கின்றது. அதன் காரணமாக, அமெரிக்கா தலைமையிலான உலக ஏகாதிபத்திய அமைப்புக்கு எதிரான உலகின் அடக்கியொடுக்கப்பட்ட நாடுகளினதும் மக்களினதும் பரந்துபட்ட ஐக்கிய முன்னணிக்கு சீனாவே இன்று தலைமைச் சக்தியாகத் திகழ்கின்றது. ஒரு காலத்தில் 'ஆசியாவின் நோயாளி' என மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகளால் எள்ளி நகையாடப்பட்ட சீனா, இன்று 'உலகின் அதிசயம்' என்ற நிலைக்கு வளர்ந்துள்ளது. 19ஆம் 20ஆம் நூற்றாண்டுகள் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் நூற்றாண்டுகளாக இருந்தன. அதற்கு அடுத்து வந்த நூற்றாண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நூற்றாண்டாக இருந்தது. இனி வரப்போகும் நூற்றாண்டு ஏகாதிபத்தியங்கள் இல்லாத ஒரு நூற்றாண்டாக, சீனாவினதும் ஏனைய உலக நாடுகளதும் நூற்றாண்டாக இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இவற்றையும் பார்யிடுங்கள் சீனப் புரட்சி 1949
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!