இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
Storm Shadow Missiles- UK
இதற்குப் பதிலடியாக, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அதிநவீன ஆரெஷ்னிக் ரக ஏவுகணை ஒன்றை உக்ரைனின் நீப்ரோ நகரிலுள்ள ராணுவ தொழிற்சாலை மீது வீசி சோதித்தோம்.. \ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில் பாயும் அந்த ஏவுகணையை உலகத்தில் உள்ள எந்த வான்பாதுகாப்பு தளவாடத்தாலும் இடைமறித்து அழிக்க முடியாது. குறிவைத்த இலக்கை அது அழித்தே தீரும்..\n மேற்கத்திய ஆயுதங்கள் ரஷியா மீது இனியும் பயன்படுத்தப்பட்டால் அதன் எதிா்வினைாக அந்த நாடுகளின் ராணுவ நிலைகள் மீது ஆரெஷ்னிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்துவோம் என்று அப்போதே எச்சரித்தோம். எனினும் அதனையும் மீறி ரஷியா மீது அட்டாக்கம்ஸ் ஏவுகணைகளை வீசி உக்ரைன் தொடா்ந்து தாக்குதல் நடத்துகிறது.. அதற்குப் பதிலடியாகத்தான், உக்ரைனின் எரிசக்தி மையங்களைக் குறிவைத்து புதன்கிழமை நள்ளிரவில் தாக்குதல் நடத்தினோம். அதையும் உக்ரைன் அலட்சியம் செய்தால், ஏற்கெனவே கூறியபடி அந்த நாட்டின் மீது ஆரெஷ்னிக் ஏவுகணைகள் வீசி மீண்டும் சோதிக்கப்படும்.. அதற்கான இலக்குகளை எங்கள் பாதுகாப்புத் துறை அமைச்சகமும் தலைமை தளபதியும் தோ்ந்தெடுத்துவருகின்றனா். அந்த இலக்குகளில் உக்ரைனின் ராணுவ நிலைகள், பாதுகாப்பு மற்றும் தொழில் மையங்கள் மட்டுமின்றி முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகார மையங்களும் இடம் பெறும்.. ""நேட்டோ உறுப்பு நாடுகள் வைத்துள்ள ஏவுகணைகளின் செயல்திறனைவிட ரஷியாவிடம் உள்ள ஏவுகணைகள் அதிக செயல்திறன் கொண்டவை. அந்த நாடுகளின் வெளிநாட்டு நிலைகளில் உள்ள ஏவுகணைகளை விட பல மடங்கு ஏவுகணைகள் ரஷியாவிடம் உள்ளன. மேற்கத்திய நாடுகளிடம் என்னென்ன ஏவுகணைகள் உள்ளன, எத்தனை உள்ளன, அவை எங்கெல்லாம் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும் என்று தனது உரையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நேட்டோ உறுப்பு நாடுகளுக்கும் விளாதிமீா் புதின் மறைமுக எச்சரிக்கை விடுத்தாா்.. ''உக்ரைன் போரில் தங்களுடன் இணைந்து போரிடுவதற்காக ஆயிரக்கணக்கான வட கொரிய ராணுவ சிறப்புப் படையினரை ரஷியா வரவழைத்துள்ளது. இதற்குப் பதிலடியாக, உக்ரைன் எல்லைக்குள் உள்ள ரஷிய நிலைகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்துவதற்காக தாங்கள் வழங்கியிருந்த அதிநவீன ஏவுகணைகளை, ரஷிய பகுதிகள் மீதும் வீசலாம் என்று அமெரிக்கா கடந்த வாரம் அனுமதி அளித்தது. பிரிட்டனும் அத்தகைய அனுமதியை பின்னா் அளித்தது..\nஅதைத் தொடா்ந்து, அந்த வகை ஏவுகணைக் கொண்டு ரஷியா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது..இதனால், ரஷிய-உக்ரைன் போரில் இரு நாடுகளுக்கு இடையே மட்டுமின்றி மேற்கத்திய நாடுகள்-ரஷியா இடையிலான பதற்றமும் வெகுவாக அதிகரித்துள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!